கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என முதலில் கூறப்பட்ட சூழலில் தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தாய் சந்தேகம் கிளப்பினார். மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என கூறி அதிர்ச்சி கிளப்பினார். இதனையடுத்து மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தப் போராட்டம் திடீரென கலவரமாக மாறியது. அந்தக் கலவரத்தின்போது பள்ளிக்குள் சென்ற சிலர் பள்ளி வாகனங்களையும், சான்றிதழ்களையும் தீயிட்டு கொளுத்தினர். மேலும் மேஜைகளையும், நாற்காலிகளையும் தூக்கி சென்றனர். இதற்கிடையே நிலைமை கைமீறி சென்றதால் காவல் துறையினர் துப்பாக்கிச்சுடும் நடத்தினர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



நிலைமை இப்படி இருக்க மாணவியின் உயிரிழப்புக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு காரணம் மாணவியின் தாய்தான் என பள்ளியின் செயலாளர் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.


மேலும் படிக்க | வேலுமணி கடிதம் கொடுத்திருக்கிறார் ஆனால்?... எதிர்க்கட்சி துணைத் தலைவர் குறித்து சபாநாயகர் அப்பாவு


இந்தச் சூழலில் சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில், ஆவடி 5வது பட்டாலியன் காமண்டர் ராதாகிருஷ்ணன், சென்னை பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் கிங்ஸிலின், விழுப்பும் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால், திருப்பத்தூர் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமணிகண்டன், நாமக்கல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரமௌலி ஆகியோ அடங்கிய குழு ஒன்றை அமைத்து விசாரணைக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.



இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கலெக்டராக இருந்த ஸ்ரீதர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், மாவட்ட எஸ்.பியாக இருந்த செல்வக்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு கள்ளக்குறிச்சி புதிய எஸ்.பியாக பகலவன் நியமிக்கப்பட்டுள்ளார்.


மேலும் படிக்க | போராடுபவர்களை கலவரக்காரர்களாக சித்தரிப்பதா? தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ