கொரோனாவை எதிர்க்கும் முயற்சியில் வீட்டை மருத்துவமனையாக மாற்றும் கமல்ஹாசன்...
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தன் பங்கை வெளிப்படுத்தும் விதமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது வீடை மருத்துவமனையாக மாற்ற முடிவுசெய்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தன் பங்கை வெளிப்படுத்தும் விதமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது வீடை மருத்துவமனையாக மாற்ற முடிவுசெய்துள்ளார்.
இதுதொடர்பான ஒரு ட்விட்டர் பதிவில் அவர்., தனது பழைய வீட்டை ஏழைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தற்காலிக மருத்துவமனையாக மாற்றத் தயாராக இருப்பதாகவும், அரசாங்கம் அனுமதி அளித்தால் மக்கல் நீதி மய்யத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது., "இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்.
உங்கள் நான்" என குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 426,113-னை கடந்துள்ளது. இதில் 19000-க்கும் அதிகமான உயிர் பலிகளும் அடங்கும். மேலும் இந்த எண்ணிக்கை ஆனது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் 9 உயிர் பலி உள்பட 512 வழக்குகள் தற்போது கண்காணிப்பில் உள்ளது. இதில் தமிழகத்தில் 23 வழக்குகள் அடக்கம்.
COVID19 TN Stats 25.3.20 :
திரையிடப்பட்ட பயணிகள்- 2,09,276
பின்தொடர்வின் கீழ் - 15,492
தற்போதைய சேர்க்கை - 211
சோதிக்கப்பட்ட மாதிரிகள் - 890 (நேற்மறை-757, எதிர்மறை- 23(1 வெளியேற்றப்பட்ட வழக்கு), செயற்பாட்டிற்கு உட்பட்டுள்ள வழக்குகள்- 110)