அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், நாளை ராமேஸ்வரத்தில் இருந்து தனது பயணத்தை துவங்குவதாக அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதற்கு முன்னதாக, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்ளை நேரில் சந்தித்து ஆசிப் பெற்று தன்னுடைய பயணத்தை தொடங்கி உள்ளார்.


அந்த வரிசையில்,நடிகர் ரஜினிகாந்த், விஜய்காந்த், நல்லகண்ணு, முன்னாள் தேர்தல் அதிகாரி சேஷன் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


அதே போன்று, இன்று காலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


அதோடு, நாளை ராமேஸ்வரத்தில் ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசுகிறார். 


இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமலின் அரசியல் பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது:


"கட்சி தொடங்கும் கமல் ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே சகுனம் சரி இல்லை. எத்தனை கமல் ஹாசன் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. என்றும்,கட்சி நடத்துபவர்களிடம் கமல்,கட்டிபுடி வைத்தியம் செய்கிறார் என்றும்,கட்சி நடத்துபவர்களிடம் ஆதரவு கோரும் கமலின்  முடிவு,கேலிக்கூத்தாக முடியுமே தவிர,விஸ்வரூபமாக மாறாது என தெரிவித்துள்ளார்.


மேலும், வயதை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினி அரசியலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.