நடிகர் கமல்ஹாசன் கடந்த சில பல மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அவருக்கு உரிய பதிலளிக்காமல் அமைச்சர்களோ கமல் அரசியலுக்கு வரட்டும், அப்போதுதான் அது எத்தகைய முள்படுக்கை என்பதை அவர் புரிந்து கொள்வார் என்று விமர்சனம் செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, கமல் ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டி அளித்த போது அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் அதற்கான பணிகளில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


ஏற்கனவே, வரும் 21-ம் தேதி தனது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீட்டிலிருந்து தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.


இந்நிலையில், தனது அரசியல் கட்சியின் பெயரை வரும் 15-ம் தேதி பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் நேரம் கேட்டுள்ளாதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


அரசியலில் எனது நிறம் நிச்சியம் காவியாக இருக்காது. எனக்கும் ரஜினிக்கும் நோக்கம் என்பது அரசியலில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான். 
நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். ஆனால் அரசியல் களம் என்பது வேறு. அரசியலில் வித்தியாசப்பட்டு இருக்கவே விரும்புகிறேன்” என கமல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.