திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று கமல்ஹாசன் பிரசாரம்
திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று கமல்ஹாசன் திட்டமிட்டப்படி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று கமல்ஹாசன் திட்டமிட்டப்படி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெறுகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன் எனக் கூறினார்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திலும், போலீஸ் நிலையங்களிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று கமல்ஹாசன் திட்டமிட்டப்படி பிரசாரம் மேற்கொள்வார் என்று அக்கட்சியின் வேட்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
மாலை 4 மணிக்கு தோப்பூரில் பிரசாரத்தை தொடங்கும் அவர் திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று கமல்ஹாசன் திட்டமிட்டப்படி பிரசாரம் மேற்கொள்வார் என்று அக்கட்சியின் வேட்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
மாலை 4 மணிக்கு தோப்பூரில் பிரசாரத்தை தொடங்கும் அவர் பனையூர், சிந்தாமணி, வில்லாபுரம், ஹவுசிங்போர்டு காலனியில் பேசுவார் என்று சக்திவேல் கூறினார்.