தன்னை பகுத்தறிவுவாதி என கூறும் கமல்ஹாசன் அமாவாசை தினத்தில் கட்சி துவங்கி, கொடியேற்றம் செய்து ஏன் வேஷம் போட வேண்டும் என தமிழிசை தாக்கு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதையடுத்து அதன் கொடியேற்று விழா நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 


இது குறித்து மதுரை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நடிகர் கமலஹாசன் கட்சி துவங்கியதும், கொடியேற்றம் செய்ததும் அமாவாசை தினத்தில் தான். தன்னை பகுத்தறிவுவாதி என கூறும் கமல்ஹாசன் ஏன் இந்த வேஷம் போட வேண்டும். தமிழகத்தில் வாக்குச்சாவடிக்கு ஒரு பா.ஜ.க பிரதிநிதி என்ற நோக்கில் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். 


தமிழகத்தில் பா.ஜ.க யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை, அழைக்காமலே கூட்டணிக்கு வர மாட்டோம் என சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. ஜி.எஸ்.டி வரியால் இந்தியாவில் பயன்பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. 


தமிழகத்தில் எதிர்வரும் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி குறித்து செப்டம்பர் அல்லது அக்டோபரில் முடிவு செய்யப்படும். உதய் திட்டத்தால் தமிழகத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தபட்டு உள்ளது. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் வஞ்சிக்கபட கூடாது, தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என அவர் தெரிவித்தார்.