முறையாக சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல; விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு தடம் புரளும் என கமல் விமர்சனம்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது இத்திரைப்படம். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்து பல தரப்பில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.


இதில், விஜயுடன் கீர்த்தி சுரேஷ், ராதாரவி மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கள்ள ஓட்டு எதிர்ப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.  


இப்படத்தில், விஜய்க்கு வில்லியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் பெயர் கோமளவல்லியாக அமைக்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு சர்சைகள் எழுந்துள்ளன. இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறி அதிமுக கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 



இந்நிலையில், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் அவைகள் சர்கார் திரைப்படம் குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டரில் "முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை  ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.