மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது என்பது ஆறுதலாக உள்ளது, ஆனால் நடுத்தர மக்களுக்கு பாராமுகமாக உள்ளது என்று நடிகர கமல் ஹாசன் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2018-19ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.


பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.


மத்திய பட்ஜெட் குறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'மத்திய அரசின் கடைக்கண் பார்வை விவசாயிகளின் பக்கம், கிராமத்தின் பக்கம் சற்றே திரும்பியிருக்கிறது. அது மனதுக்கு சற்றே இதமாக இருக்கிறது.


ஆனால், பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தின் மீது மத்திய அரசு பாரா முகம் காட்டி உள்ளது. பட்ஜெட்டில் தமிழகம் பல ஆண்டுகளாகவே புறக்கணிக்கப்படுவது ஒரு சோகம். பட்ஜெட் குறித்து அறிஞர்களுடன் ஆலோசித்த பின்னரே எனது கருத்தை தெளிவாக கூற முடியும். மத்திய அரசின் பார்வை விவசாயிகள்,கிராமம் பக்கம் சற்றே திரும்பி இருக்கிறது. போக்குவரத்தின் ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்வது முதலாளித்துவத்தின் உச்சகட்டம்.இவ்வாறு அவர் கூறினார்.