காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பத்து பேர் இன்று தாங்கள் வகித்து வந்த நிலைக் குழு பதவிகளை ராஜினாமா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேயருக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ள நிலையில் 10மாமன்ற உறுப்பினர்கள் ஒரே அடியாக கூட்டாக சேர்ந்து ராஜினாமா கடிதங்களை மாநகராட்சி ஆனையரிடம் வழங்கி நிலைக்குழு பதவிகளை புறம் தள்ளியுள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சிமி உள்ள நிலையில் தற்போது மேயர் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து ஆளும் திமுக உட்பட அதிமுக, பாமக, பாஜகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து மேயரை மாற்றிட கோரி போர் கொடி தூக்கியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு


இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் கணக்கு குழு, பொது சுகாதாரக் குழு, கல்விக் குழு, வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு, நகரமைப்புக் குழு, பணிகள் குழு என 7 நிலைக்குழுவில் ஏற்கனவே பணிகள் குழுவின் உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது எங்கள் வார்டுகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் சரி வர மேற்கொள்ளாததால் தங்களுக்கு இந்த பதவிகள் இருந்தும் எவ்வித பயனில்லை எனக் கூறி பொது சுகாதாரக் குழுவைச்சேர்ந்த 01 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஸ்மா பேகம் (தி.மு.க ), 29 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜி.குமரன் (தி.மு.க), 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் புனிதா சம்பத் (அ.தி.மு.க), 37 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரளா சம்பத் (தி.மு.க) மற்றும் கணக்கு குழுவைச் சேர்ந்த 06 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரியா குழந்தைவேலு (தி.மு.க) 10 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி சண்முகம் (பா.ம.க) ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.


மேலும் நகரமைப்பு குழுவைச் சேர்ந்த 33 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஷோபனா கண்ணன் (தி.மு.க), 35 வது மாமன்ற உறுப்பினர் வார்டு ரமணி பொன்னம்பலம்(தி.மு.க), வரிவிதிப்புக்குழுவைச் சேர்ந்த 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.சங்கர் (தி.மு.க), 40 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பானுப்பிரியா சிலம்பரசன் (சுயே) ஆகிய 10 மாமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்துள்ளனர். அதற்காக காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனை நேரில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை 10 மாமன்ற உறுப்பினர்களும் கூட்டாக ஒன்று சேர்ந்து வழங்கியுள்ளனர்.


ஏற்கனவே இந்த ஏழு நிலைக் குழுவில் பணிகள் குழு ராஜினாமா செய்த நிலையில், இன்று ஒரே நாளில் நான்கு குழுக்கள் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஆளும் திமுக மற்றும் அதிமுக, பாமக, பாஜக, சுயேட்சை உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு வழங்கி இருக்க கூடிய நிலையில், தொடர்ந்து அவருக்கு எதிராக மாமன்ற உறுப்பினர்கள் பலர் தொடர் குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் முன்வைத்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் நிலைக்குழு பதவுகளை 10 மாமன்ற உறுப்பினர்கள் கூட்டாக ராஜினாமா செய்து அப்பதவிகளை புறம்தள்ளியுள்ளது காஞ்சிபுரம் பொது மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | இன்று முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்... சில முக்கிய அம்சங்கள் விபரம்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ