காஞ்சிபுரத்தில் பல ஆண்டுகளாக குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர் பிரச்சினை
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவர்மேடு அருந்ததி பாளையம் பகுதியில் கழிவுநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மாமன்ற உறுப்பினர் தலைமையில் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு பகுதி பல்லவர்மேடு அருந்ததி பாளையம். இப்பகுதி தாழ்வான பகுதி என்பதால் அவ்வப்போது புதை வடிகால் இணைப்பில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீரானது குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்பது பல ஆண்டுகாலமாகவே தொடர்கிறது.அதிலும் பருவ மழையின் போது கழிவுநீருடன் மழைநீர் கலந்து புதை வடிகாலின் வழியாக இப்பகுதியில் தேங்கி துர்நாற்றத்துஅன் அப்பகுதியே குளம்போல் காட்சியளித்து அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழலும் ஏற்படுகின்றது.
இது குறித்த அப்பகுதி மக்களும் அப்பகுதியின் மாமன்ற உறுப்பினரும் பலமுறை காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எவ்வித நிரந்தர தீர்விற்க்கான நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடந்த பருவ மழையின் போது கூட சாலை மறியலில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டப்போது,உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாலும் கழிவுநீர் உறிஞ்சும் லாரிகள் மூலம் கழிவுநீர் ஆனது உறிஞ்சப்பட்டு தற்காலிக நடவடிக்கையாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரத்தில் பெய்த மழையின் காரணமாக அருந்ததிபாளையம் பகுதியில் கழிவுநீரானது தேங்கி நின்று வருகிறது. மேலும் கழிவுநீரானது தொடர்ந்து வெளியேறி அப்பகுதியில் குளம் போல் கழிவு நீர் தேங்கி நின்றும் வருகிறது.இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்களும் தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், அப்பகுதி மக்கள் கொந்தளித்து சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்த நிலையில்,அப்பகுதியில் மாமன்ற உறுப்பினர் மௌலி சசிகுமார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி காத்திருக்க கூறி,பின்னர் மாநகராட்சி ஆணையரிடம் தகவல் அளித்தும் 2 மணி நேரத்திற்கு மேலாக சம்பவ இடத்திற்கு எந்த அதிகாரியும் வராதால் அப்பகுதியின் மாமன்ற உறுப்பினர் மௌலி சசிகுமார் தலைமையில் அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பல்லவர்மேடு-தாயார்குளம் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையெத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார்,சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து, போக கூறிய நிலையில் மாநகராட்சி ஆணையர் நேரில் வரும்வரை சாலை மறியல் போராட்டத்தை நாங்கள் கைவிடமாட்டோம் என கூறியதால் போலீஸாருக்கும் போராட்டகாரர்களுக்குமிடையே கடும் வாக்குவாதமானது ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையெடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, மறியல் போராட்டத்தினை கைவிட்டு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். பல்லவர்மேடு-தாயார்குளம் சாலையில் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டதால் 30நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பானது ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அணை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்! எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ