துயரம்: கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த 4 பேரும் உயிரிழந்தனர்
நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 23-ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு, அதே மாவட்டத்தை உள்ள காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த இசக்கிமுத்து தன் குடும்பத்துடன் தங்கள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ பற்ற வைத்துகொண்டனர். இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி, இரு பெண் குழந்தைகள் உடலிலும் பற்ற எறிந்த தீயை அணைக்க அக்கம்பக்கத்தினர் அணைக்க முயன்றனர். பின்னர் நான்கு பேரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி, இரு பெண் குழந்தைகளும் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இசக்கிமுத்து இன்று உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.