DMK MP Kanimozhi Campaign in Dharapuram : ஈரோடு தொகுதி வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து தாராபுரம் சட்டமன்றத் தொகுதி மூலனூரில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், இந்த தேர்தல் நமக்கு ஓர் சுதந்திர போராட்டம். இந்த தேர்தலில் அவர்களுக்கு எதிராக நாம் வெற்றி பெறவில்லை என்றால் இது தான் இந்தியாவிற்கே கடைசி தேர்தல் என எச்சரித்தார். தொடர்ந்து பேசிய கனிமொழி, " முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சொன்ன திட்டங்களை விட சொல்லாத திட்டங்களையும் செய்து கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி எதைச் சொன்னாலும் அதைச் செய்யவே மாட்டார். இதுவரை வாக்குறுதியாக சொன்னது எதையுமே அவர் செய்த வரலாறே கிடையாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரூ. 1000 சர்ச்சை வீடியோ! “தோல்வி பயத்தில் இப்படியா..” கதிர் ஆனந்த் அதிரடி பதிவு!


மோடி அனைவருக்கும் 15 லட்சம் வங்கிக் கணக்கில் போடுவோம் என்று சொன்னார். ஆனால் நாம் வங்கிக் கணக்கில் இருப்பு இல்லையென்றால் அதிலிருந்து குறைந்த காசையும் எடுத்துக் கொள்ளும் பிரதமர் தான் மோடி. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவேன் என்றாரே, அது நடந்ததா?, ஜிஎஸ்டி வரி, நீட் தேர்வு போன்ற முரண்பாடான கொள்கைகளை தமிழக மக்களுக்கு திணித்து மக்களின் வரிப்பணத்தை சுரண்டிக்கொண்டு அதானி, அம்பானி போன்றவர்களை வாழ வைத்துக் கொண்டிருப்பவர் தான் நமது பிரதமர் மோடி என கனிமொழி காட்டமாக விமர்சித்தார்.



பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 460 ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது 1100 ரூபாய். இதேபோல் பெட்ரோல் டீசல் விலை 63 ரூபாயாக இருந்தது. இன்று 103 ரூபாய் என விலை உயர்த்தப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்தால் நீங்கள் சந்திக்கும் தேர்தல் இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பெட்ரோல் டீசல் விலை பாதியாக குறைக்கப்படும். அதேபோல் தமிழ்நாட்டில் எங்குமே டோல்கேட் என்ற சுங்கச்சாவடி இருக்காது. அத்தனையும் உடனடியாக அப்புறப்படுத்தி விடுவோம் என கனிமொழி கூறினார்.


தொடர்ந்து பேசிய கனிமொழி, விசாயிகளுக்கு சிறப்பு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு அவை அனைத்தும் நிறைவேற்றப்படும். மீண்டும் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும். மழை வெள்ளம், புயல் பாதித்த பொழுது எல்லாம் வராத மோடி, தேர்தல் வரும் சமயம் என்பதால் 10க்கும் அதிகமான முறை தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். அவர் எத்தனை முறை இங்கு வந்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. திராவிட மாடல் ஆட்சியை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உணர்வோடு இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும். உங்கள் வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று பேசினார்.


மேலும் படிக்க | தமிழகத்தில் அதீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - மன்சூர் அலிகான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ