ரூ. 1000 சர்ச்சை வீடியோ! “தோல்வி பயத்தில் இப்படியா..” கதிர் ஆனந்த் அதிரடி பதிவு!

Vellore DMK Candidate Karthir Anand Instagram Video: திமுக வேலூர் தொகுதி நட்சத்திர வேட்பாளரான கதிர் ஆனந்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பாஜக வீடியோ ஒன்றை பரப்பி விட்டதாக கதிர் ஆனந்த் தனது இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.    

Written by - RK Spark | Last Updated : Mar 28, 2024, 06:34 PM IST
  • இன்ஸ்டாவில் கதிர் ஆனந்த் வீடியோ பதிவு.
  • சமீபத்திய பேச்சுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
  • பாஜக போலி செய்தி பரப்புவதாக புகார்.
ரூ. 1000 சர்ச்சை வீடியோ!  “தோல்வி பயத்தில் இப்படியா..” கதிர் ஆனந்த் அதிரடி பதிவு!  title=

Vellore DMK Candidate Karthir Anand Instagram Video: 2024 மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் மும்முரம் காட்டி வருகின்றனர். திமுக சார்பில் வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இவரும் தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் இவர் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி கடும் சர்சையை கிளப்பியது. 

மேலும் படிக்க - என்னடா இது ஓபிஎஸ்சுக்கு வந்த சோதனை.. ஒரே பெயரில் 5 பேர் போட்டி!

சமீபத்தில் அவர் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டபோது, மக்களைப் பார்த்து, ”நன்றாக இருக்கிறீர்களா? அனைவரும் பவுடர் அடித்து, பேரன் லவ்லி போட்டு பளபளவென இருக்கிறீர்களே" என்று கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்த மக்கள், 1000 ரூபாய் வருவதால் என கோஷமிட்டுள்ளனர். அதனைக்கேட்டு சிரித்த கதிர் ஆனந்த், “ஓ ஆயிரம் பேசுதா? நன்றாக தெரிகிறது.. பளிச்சென இருக்கிறீர்கள். தளபதி ஆட்சியில் நன்றாக இருக்கிறீர்கள்” என்று  கூறியுள்ளார். இந்த நிகழ்வின் வீடியோவை எடிட் செய்த எதிர் கட்சியினர், மக்களை 1000 ரூபாயை வாங்குகிறீர்களா என கதிர் ஆனந்த் ஏளனம் செய்தது போல சித்தரித்துள்ளனர். 

அந்த வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இந்நிலையில் இதற்கு கதிர் ஆனந்த் தனது இன்ஸ்டாவில் விளக்கம் அளித்துள்ளார். அதில் எடிட் செய்யப்பட்ட வீடியோவும், நிஜமாக கதிர் ஆனந்த் பேசிய வீடியோவும் இடம் பெற்றுள்ளது. அதோடு, “தோல்வி பயத்தில் வீடியோவை தவறாக சித்தரித்துப் பரப்பும் மோடி மீடியா!” என்றும் காட்டமாக பாஜகவை தாக்கி பதிவிட்டுள்ளார். 

சிட்டிங் எம்.பி.யான கதிர் ஆனந்த் இந்த முறையும் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். கடந்த முறை ஏ.சி.சண்முகம் கதிர் ஆனந்த்துடன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இங்கு அதிமுக சார்பில் மருத்துவர் பசுபதி களம்காண்கிறார்.

மக்களவைத் தேர்தல் 2024 முழு விவரம்

இந்தமுறை நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வரும் ஜூன் 4 ஆம் தேதி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க - கரூர் நாடாளுமன்ற தொகுதி: முன்னாள் அதிமுக அமைச்சர் தீவிர பிரச்சாரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News