பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை-கனிமொழி எம்.பி காரசார பேச்சு!
பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.
திமுக மகளிர் உரிமை மாநாடு சென்னையில் இன்று நடந்தது. இதில், கனிமொழி எம்.பி பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேசியுள்ளார்.
மகளிர் உரிமை மாநாடு:
திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு இன்று சென்னையில் நடைப்பெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை வந்துள்ளனர். அவர்கள் மட்டுமன்றி, மெஹபூபா முஃபதி, சுரியா சுலே, எம்.பி அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | மகன் கண்முன்னே எரித்துக்கொல்லப்பட்ட கர்ப்பிணி! கணவன் வெறிச்செயல்! என்ன நடந்தது?
பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை..
திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கனிமொழி எம்.பி பாஜக ஆட்சி குறித்து பல கருத்துகளை பேசினார். அப்போது, பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என குறிப்பிட்டார். மேலும், மகளிர் இட ஒதுக்கீடை பாஜக நடைமுறை படுத்தாது என்றும் கனிமொழி குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் பட்டியல் இன பெண் என்படால் அமைச்சரே ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாஜக கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறை படுத்தப்படாது என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய கனிமொழி, மத்திய அரசின் கொள்க முடிவுகளில் மகளிருக்கு இடமில்லை என்றும் அவர் கூறினார். திமுகவின் இன்றைய மாநாட்டில் பெண்கள் அறிவொளி தீபங்களாக பங்கேற்று உள்ளதாகவும் ஒடுக்கப்பட்ட சமூக பெண் என்பதால் குடியரசு தலைவரும் இதனால் அவமதிக்கப்பட்டுள்ளதாகவும் கனிமொழி கூறினார்.
மேலும் படிக்க | துரத்திய பகை..! ரவுடி சரண் கொலை வழக்கின் 4 பேர் சரண்! அப்டேட் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ