மகளிர் உரிமைத் தொகை: முக்கிய அப்டேட் வெளியீடு.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

திட்டத் தொகை ரூ.1000 பயனாளிகளின் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுவருவதாகக் கூறிய கள்ளக்குறிச்சி ஆட்சியர், ஓடிபி, சிவிவி எண்கள் அல்லது ரகசிய வங்கி விவரங்களை யாருக்கும் தொலைபேசியில் தெரிவிக்க வேண்டாம் என்று மக்களை எச்சரித்துள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 17, 2023, 10:56 AM IST
  • தொகைக்கு இதுவரை விண்ணப்பம் செய்யாதவா்களும் விண்ணப்பிக்கலாம்.
  • மகளிர் உரிமை தொகை பெற புதிதாக விண்ணப்பிக்கலாமா?
  • 1 கோடியே 6 லட்சத்துக்கு 50 ஆயிரம் பெண்கள் தகுதியுள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
மகளிர் உரிமைத் தொகை: முக்கிய அப்டேட் வெளியீடு.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள் title=

கலைஞர் மகளிர் உரிமை தொகை அப்டேட்: மகளிர் உரிமைத் தொகை திட்டம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதில் பலருக்கும் கடந்த 14 ஆம் தேதியே அவர்களின் வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் கிரெடிக் ஆகத் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது இந்த திட்டத் தொகை குறித்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய அப்டேட் ஒன்றை வழக்கியுள்ளார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தது. அதன்படி ஆட்சிக்கு வந்ததும் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இரண்டு கட்டங்களாக இதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

மொத்தமாக 1 கோடியே 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த திட்டத்துக்காக விண்ணப்பித்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்துக்கு 50 ஆயிரம் பெண்கள் தகுதியுள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு 15 ஆம் தேதி முதல் வங்கிக்கணக்குகளில் 1000 ரூபாய் செலுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்க போறீங்களா... வட்டியில் சலுகை வழங்கும் SBI... மிஸ் பண்ணாதீங்க!

இந்நிலையில் தற்போது திட்டத் தொகை ரூ.1000 பயனாளிகளின் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுவருவதாகக் கூறிய கள்ளக்குறிச்சி ஆட்சியர், ஓடிபி, சிவிவி எண்கள் அல்லது ரகசிய வங்கி விவரங்களை யாருக்கும் தொலைபேசியில் தெரிவிக்க வேண்டாம் என்று மக்களை எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜாதவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநில அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ₹1,000 வரவு அனுபத் தொடங்கியுள்ளது.

வங்கிகள் அல்லது வங்கி தொடர்பான நிறுவனங்களில் இருந்து பயனாளிகள் தங்கள் மொபைல் போன்களில் அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் வந்தால், அவர்களின் OTP அல்லது CVV எண்களை ஷேர் செய்யக்கூடாது என்றார். அதேபோல் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் விண்ணப்பத்தின் நிலை குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

மகளிர் உரிமை தொகை பெற புதிதாக விண்ணப்பிக்கலாமா?
இதனிடையே ‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற இதுவரை விண்ணப்பம் செய்யாத தகுதியுள்ள பயனாளிகள் இணைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாராகள் மேல் முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மகளிா் உரிமைத் தொகைக்கு இதுவரை விண்ணப்பம் செய்யாதவா்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கென இணைய சேவை மையங்களில் வசதி செய்யப்பட உள்ளது. இந்த வசதியை வரும் 18-ஆம் தேதி முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேல்முறையீடு செய்யப்படும் விண்ணப்பங்களை இணையதளம் வழியாகவே கோட்டாட்சியர்கள் பரிசீலிப்பா் என தகவல் வெளியாகியுள்ளது.

கைபேசியில் குறுஞ்செய்தி வந்த நாளில் இருந்து 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும், மேல்முறையீட்டு பரிசீலனையை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டுமெனவும்  கூறப்படுகிறது.

இனி விண்ணப்பிக்க முடியுமா?
இந்த திட்டத்தில் இணைய ஜூலை 24ஆம் தேதி முதல் ஆக. 4ஆம் தேதி வரை முதற்கட்ட முகாமும், ஆக. 5ஆம் தேதி முதல் ஆக. 14ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட முகாமும் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஆக. 18, 19, 20 ஆகிய தேதிகளில் விடுபட்டவர்களும், விண்ணப்பிக்க தவறியவர்களும் விண்ணப்பிக்க சிறப்பு முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது இத்திட்டம் முழுவதுமாக செயல்பட தொடங்கிவிட்டது.

இதில், இன்னும் சிலர் விண்ணப்பிக்க தவறியதாக தெரிகிறது. அவர்கள் இத்திட்டத்தில் இணைய ஏதேனும் வழிகள் உள்ளதா, புதியதாக ரேஷன் கார்டு பெறும் குடும்பத் தலைவிகள் இதற்கு விண்ணப்பிக்க முடியுமா என்று கேள்விகள் எழுகின்றன. ஆனால், இதுவரை அப்படி இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் வரவில்லை. அரசு இது சார்ந்து அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே அடுத்த கட்டமாக இதில் பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | NPS Scheme: ஓய்வுபெறுகையில் 1 கோடி ஜாக்பாட் வருமானம்.. ஊழியர்களுக்கான அசத்தல் திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News