Kanimozhi, Railways | நாடாளுமன்றத்தில் தூத்துக்குடி திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசினார். அப்போது ரயில்வே துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார். தெற்கு ரயில்வே துறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், அதற்கு போதுமான நிதியை ஒதுக்குவதில்லை என்றும் குற்றம்சாட்டினார். குறைகளை சுட்டிக்காட்டினால் மத்திய அரசு ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதை பற்றி பேசுவதாக குற்றம்சாட்டிய கனிமொழி, ரயில்வே துறையை ஒட்டுமொத்தமாக கைகழுவ மத்திய அரசு முயற்சி செய்துவிட்டதாகவும் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், கனிமொழி எம்பி பேசும்போது, " வழக்கம்போல ஒன்றிய அரசு அனைத்து அதிகாரங்களையும் தனது கையில் எடுத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என கட்டளையிடுவதைபோலவே இரயில்வே திருத்த மசோதா 2024 விசயத்திலும் நடந்துகொள்கிறது. நாட்டிலுள்ள மற்ற அனைத்து இரயில்வேகளைவிட தெற்கு இரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட இரயில்களின் தரம் மிக மோசமானதாக இருக்கின்றது. உணவு மற்றும் கழிப்பறை வசதிகளின் தரம்கூட மிக மோசமானதாக இருக்கின்றன. இதை சுட்டிக்காட்டும்போது ஒன்றிய அரசு இரயில்வேதுறை தனியார்மயமாக்கலை முன்மொழிகிறது. 


மேலும் படிக்க | ஈரோட்டில் போலி ரூ.110 தாள் கொடுத்து டீக்கடை உரிமையாளரை ஏமாற்றிய மர்மநபர்


இப்படி இரயில்வேதுறையை ஒன்றிய அரசு கைகழுவுவது சரியல்ல. நாட்டின் பெரும்பான்மையான அடித்தட்டு மக்கள் இன்றும் தங்களின் முதன்மை போக்குவரத்தாக இரயில்களையே நம்பி இருக்கின்றனர். அதை கருத்தில்கொண்டு இரயில்வேதுறை தனியார்மயமாக்கும் எண்ணத்தை ஒன்றிய அரசு முற்றிலுமாக கைவிடவேண்டும். மேலும் எனது தொகுதியான தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி என்பது வணிகர்கள் அதிகமுள்ள நகரம். ஆனால் சென்னை-தூத்துக்குடி வழித்தடத்தில் நாளொன்றுக்கு ஒரு இரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. இரயில்வே அமைச்சகம் கூடுதல் இரயில்களை இவ்வழித்தடத்தில் இயக்கவேண்டும் உடனடியாக முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும், சென்னை-தூத்துக்குடி வழித்தடத்தில் வந்தேபாரத் இரயில் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்."என தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | உதயசூரியன் என்றாலே கண்கள் கூசும் ஆட்களுக்கு.... விடியல் தெரியாது - ஸ்டாலின் தடாலடி!


ரயில் விபத்துகள் அதிகமாக நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் கனிமொழி இந்த முக்கிய குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார். ஏற்கனவே தெற்கு ரயில்வே துறைக்கு போதுமான நிதி ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில், திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நாடாளுமன்ற மக்களவையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. வடக்கு மற்றும் வடகிழக்கு ரயில்வே துறை, மத்திய மண்டல ரயில்வே துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசு தெற்கு ரயில்வே துறைக்கு மட்டும் குறைவாக நிதி ஒதுக்குவது ஏன்? என்பது தெரியவில்லை என பலரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைதிருக்கின்றனர். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ