இன்று ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் சூழல் உள்ளது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகளை அடுத்து இந்தியாவில் 2 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்வியை அரசியல் விமசகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி., கார்த்தி சிதம்பரம், தனது ட்விட்டரில் காங்கிரஸை கேலி செய்யும் வகையில் ட்வீட் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “நெட்பிளிக்ஸ்-ல் பார்க்க ஒரு படத்தை பரிந்துரை செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். 


மேலும் படிக்க | 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி...காங்கிரஸின் பரிதாப நிலை


இந்த பதிவின் கீழ் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். நெட்டிசன் ஒருவர், “பேர் கெடுக்கும் பிள்ளை - படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். நெட்பிளிக்ஸ்-ல் படம் வரவில்லை என்றால் கண்ணாடியை பாருங்கள்” என்று எழுதியுள்ளார். அதேபோல மற்றொருவர், “உங்களுக்கு முதலும் கடைசியுமான எம்.பி., பதவி இதுதான்” என கமெண்ட் செய்துள்ளார்.


 



மேலும், காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு உங்களைப் போன்றவர்கள் தான் காரணம் எனவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். பொதுவாகவே கார்த்தி சிதம்பரம் எப்போதும் காங்கிரஸ் கட்சியை கலாய்த்து ட்வீட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | வேட்பாளர்களை ரிசார்ட்களில் தங்க வைத்த காங்கிரஸ், ஆம் ஆத்மி...தொடங்கியது அரசியல் ஆட்டம்



உத்தரபிரதேசத்தில் இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அங்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை முன்நிறுத்தி காங்கிரஸ் களம் கண்டது. ஆனால் காங்கிரஸ்-ன் யுக்தி தோல்வியையே சந்தித்துள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீங்கி பிற கட்சியில் இணைந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.