வேட்பாளர்களை ரிசார்ட்களில் தங்க வைத்த காங்கிரஸ், ஆம் ஆத்மி...தொடங்கியது அரசியல் ஆட்டம்

கோவா சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்படுவதால் எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை சொகுசு விடுதிகளில் தங்க வைத்துள்ளன.

Written by - Chithira Rekha | Last Updated : Mar 9, 2022, 04:53 PM IST
  • கோவாவில் தொங்கு சட்டப்பேரவை?
  • ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்ட வேட்பாளர்கள்
  • குதிரை பேரத்தை தடுக்க கட்சிகள் தீவிரம்
வேட்பாளர்களை ரிசார்ட்களில் தங்க வைத்த காங்கிரஸ், ஆம் ஆத்மி...தொடங்கியது அரசியல் ஆட்டம் title=

கோவா, உத்தரப்பிரதேசம் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கோவாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கூறப்பட்டது. 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். காங்கிரஸ் கூட்டணி 14- 20 இடங்களிலும், பாஜக கூட்டணி 14-18 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. 

நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால் எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்கப்படுவதை தடுக்க காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை சொகுசு விடுதிகளில் தங்க வைத்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆம் ஆத்மியின் வேட்பாளர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பிரித்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர்கள் திருடப்படுவதை தடுக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளதென காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஏனெனில், கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், பாஜக 14 இடங்களிலும் வெற்றி பெற்றன. இருப்பினும், சுயேச்சை எம்எல்ஏக்கள், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. பின்னர் அடுத்த ஆண்டே 15 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காங்கிரசில் இணைந்தனர். இம்முறையும் அதே போன்று நிகழ்வதை தடுக்க காங்கிரஸ் கட்சி முன்னதாகவே தங்களது வேட்பாளர்களை சொகுசு விடுதிகளில் தங்க வைத்துள்ளது.  

மேலும் படிக்க | உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

Congress

பெரும்பான்மை கிடைக்காவிடில் பாஜக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாராக உள்ளதாக கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ் ஏற்கனவே அறிவித்துள்ளார். பாஜகவும் சுயேச்சை எம்எல்ஏக்களை அணுகத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் நேற்று டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். ஆட்சியை தக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் பிரதமர் மோடியிடம் விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. முக்கிய கட்சிகளின் அடுத்தடுத்த நிகழ்வுகளால் கோவா அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | LIVE Exit Poll 2022: உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் - எந்தக் கட்சி ஆட்சி அமைக்கிறது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News