மோடி அரசின் ஊழலை மறைக்கவே கார்த்தி சிதம்பரம் கைது -பிரியங்கா திரிவேதி
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதால், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கருத்து மோதல்
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீடுக்கான அனுமதி பெற்றுத்தர ரூ.10 லட்சம் முறைகேட்டிற்காக உதவியதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதே விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா திரிவேதி கூறியதாவது:- மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு மீது தினந்தோறும் புதிய புதிய ஊழல் புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நிரவ் மோடி, மெகுல் சோக்சி, துவாரகா தாஸ் ஆகியோரின் பண மோசடிகளை திசை திருப்புவதற்காகவும், மோடி அரசு தங்கள் அரசின் ஊழலை மறைப்பதற்காகவும் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.
கார்த்தி சிதம்பரத்தை இன்று மாலை டில்லி அழைத்துச் செல்லவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.