கருணாநிதி நடத்தி வைத்த விக்ரம் மகள் திருமணம்!!
கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதி, தனது கொள்ளுப்பேரன் திருமணம் நிகழ்ச்சியில் இன்று கலந்துக் கொண்டார். இதனால் கோபாலபுரம் இல்லமே மகிழ்ச்சியில் களை கட்டியது.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைபாடு ஏற்பட்டதால் ஒய்வு பெற்று வந்தார். கட்சிக்காரர்கள் சந்திப்பதும் மற்றும் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் மனோ ரஞ்சிதுக்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்சிதாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயாதார்த்தம் நடைபெற்றது. இன்று திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து ஆசீர்வாதம் செய்தார். திருமணம் மிகவும் எளிமையாக கோபாலபுரம் இல்லத்தில் நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொண்டதால், திமுக தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.