கருணாநிதி உடல்நிலையில் மேலும் முன்னேற்றம்- மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் கருணாநிதிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த நவம்பர் மாதம் உடலில் ஒவ்வாமை காரணமாக கொப்பளங்கள் ஏற்பட்டது. இதற்காக கடந்த 15-ம் தேதி இரவு கருணாநிதிக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவரை காவேரி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் குழுவினர் பரிசோதித்தபோது, தொண்டை, நுரையீரலில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடுமையான மூச்சு திணறல் அவதிக்கு உள்ளாகுவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது. அவரது தொண்டையில் துளையிட்டு சுவாச குழாய் (டிரக்கியாஸ்டமி) பொருத்தப்பட்டது.
இதனால் அவரது உடல் நிலை சீரானது. டி.வி. பார்ப்பது, பத்திரிகை படிப்பது போன்ற பணிகளில் ஈடுபடத்தொடங்கினார். தற்போது அவர் இயல்பாக சுவாசிக்கிறார். அவரது உடல் நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
கருணாநிதி குணம் அடைந்து வருவதால் மருத்துவ மனையில் முகாமிட்டிருந்த மு.க.ஸ்டாலின் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று நாமக்கல் சென்றுள்ளார்.
மேலும் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.