த்ரிஷா - கூவத்தூர் சர்ச்சை... ஏவி ராஜூ மீது நடிகர் கருணாஸ் புகார்..!
தன்னைப் பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜூ மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகர் கருணாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.
அதிமுகவின் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜு என்பவர் சமீப நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்தும் நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இதையடுத்து ஏ.வி ராஜு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு சினிமா துறையில் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக நடிகை திரிஷாவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதிமுக நிர்வாகி ஏவி ராஜு மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு
நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் தான், கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுக்காக நடிகைகளை அழைத்து வர ஏற்பாடு செய்ததாக ஏ.வி.ராஜு தெரிவித்திருக்கிறார். அது மட்டுமன்றி, இதனை செய்ய பணம் கொடுத்தது எடப்பாடி பழனிசாமி தான் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் தன்னைப் பற்றி அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகி ஏவி ராஜு மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் தற்போது முக்குலத்தோர் புலிகள் படை கட்சியின் நிறுவனராகவும் செயல்பட்டு வருகிறேன் நடிகர் சங்கத்திலும் துணைத் தலைவராக இருந்து வருகிறேன் இந்த நிலையில் அதிமுக நிர்வாகி எர்.வி.ராஜூ என்பவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பொய்யான தகவலையும் என் மீது வன்மம் கொண்டு அவதூறாக மற்றும் அருவருப்பான மற்றும் உண்மைக்கு மாறான செய்தியை பரப்பி உள்ளார்.
விளம்பரத்திற்காக அவர் பேட்டி கொடுத்துள்ளார் ஏவி ராஜு
மேலும் அதில் நடிகை திரிஷா பற்றியும் என்னை தொடர்பு படுத்தி கூவத்தூரில் அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தேன் என்றும் நடிகைகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தேன் என்றும் உண்மைக்கு மாறாக பொய்யான பதிவை விளம்பரத்திற்காக அவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில் இமை அளவு உண்மை இல்லாத பொழுது அவர் கொடுத்த பேட்டி வீடியோ பல்வேறு தரப்பினரால் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது தற்போது பல youtube சேனல்களிலும் என்னைப் பற்றியும் திரிஷா பற்றியும் பல்வேறு உண்மைக்குமாறான பொய்யான அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க | பிரபல நிறுவனத்தின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ரன்வீர் சிங்!
பெயருக்கும் புகழுக்கும் சமுதாயத்தில் களங்கம் ஏற்படுத்தி உள்ளார் ஏவி ராஜு
மேலும் அதிமுக நிர்வாகி ஏவி ராஜு எந்த ஆதாரமும் இன்றி கொடுத்த பொய்யான பேட்டியால் எனது பெயருக்கும் புகழுக்கும் சமுதாயத்தில் களங்கம் ஏற்படுத்தி உள்ளார் உண்மைக்கு மாறான பேட்டியின் காரணமாக நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே அவர் மீது பொய்யான தகவலை பரப்பும் youtube சேனல்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த வீடியோவை யூடியூப் சேனல்களில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டார்.இந்த புகார் மனு குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | Actress Jayalakshmi BJP: பண மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி நடிகை ஜெயலட்சுமி கைது.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ