மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயம் செய்யும் முறை  பழக்கத்தில் இருந்தது. 


ஆனால், தற்போது, பெட்ரோல், டீசல் விலைகள் தினசரி நிர்ணயிக்கப்படுகின்றன. சர்வதேச நிலையில், கச்சா எண்ணெய் விற்கப்படும் விலைக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல்  விலைகள் தினமும் நிர்ணயம் செய்யப்படுகின்றன.


கடந்த சில நாட்களாக, பெட்ரோல் டீசல்  விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட, நிலையில் பெட்ரோல் இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது.


சென்னையில் நேற்று பெட்ரோல் விலை  லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ₹94.54 என்ற அளவிலும், அதே போன்று, டீசல் விலையும் 27 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ₹88.34 என்ற அளவிலும் விற்பனை செய்யப்பட்டது.  இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.


சென்னையில் நேற்று பெட்ரோல் விலை  லிட்டருக்கு ₹94.31 என்ற அளவிலும், அதே போன்று, டீசல்  லிட்டருக்கு ₹88.07 என்ற அளவிலும் விற்பனை செய்யப்பட்டது.  


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் பொது முடக்கம்  அமல்படுத்தப்பட்டது. அதை அடுத்து பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் இல்லாமல் இருந்தது.  அதன் பிறகு விலைகளில் மாற்றம் காணப்பட்டது. தினந்தோறும், வரலாறு காணாத உச்சம் தொட்டு மக்களுக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது.


ALSO READ | இந்த 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்


டெல்லியில் பெட்ரோல் விலையில் மத்திய அரசு லிட்டருக்கு ₹32.98 ஆகவும், விற்பனை வரி அல்லது மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி VAT ₹19.55 ஆகவும் உள்ளது.


டீசலைப் பொறுத்தவரை, மத்திய கலால்  வரி ₹31.83 என்ற அளவிலும், மதிப்பு கூட்டு வரி  ₹10.99 ஆகவும் உள்ளது. தவிர, விலையில் ஒரு லிட்டருக்கு  ஆன, குறைந்தபட்சம டீலர் கமிஷன்  ₹2.6 மற்றும் டீசலுக்கு ₹2 என்பதும் அடங்கும்.


ALSO READ | உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்கள்; ஒரு அலசல்
 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR