உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்கள்; ஒரு அலசல்

மிக அதிக விலையில் ஸ்மாட்போன் வாங்குவதை விட, ₹20,000 அல்லது சுமார் ₹15,000 என்ற விலையில் ஸ்மார்போன் வாங்குவதைத் தான் மக்கள் அதிகம் விரும்புகின்றனர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 16, 2021, 06:35 PM IST
  • பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் தான் வாடிக்கையாளர்களின் கவனத்தை அதிகம் கவருகின்றன.
  • போனை, 2-3 வருடத்தில் மாற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் அதிக இழப்பு இல்லை.
உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்கள்; ஒரு அலசல் title=

சந்தை தேவைக்கு ஏற்ப தினம் தினம் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை, மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளியிட்டு வருகின்றன. அதனால், மிக அதிக விலையில் ஸ்மாட்போன் வாங்குவதை விட, ₹20,000 அல்லது சுமார் ₹15,000 என்ற விலையில் ஸ்மார்போன் வாங்குவதைத் தான் மக்களும் அதிகம் விரும்புகின்றனர். 

மிக அதிக விலையில் வாங்காமல், ₹20,000 என்ற விலையில் வாங்கும் போது,  போனை, 2-3 வருடத்தில் மாற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் அதிக இழப்பு இல்லை எனலாம்.  அதனால், தான் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் தான் வாடிக்கையாளர்களின் கவனத்தை அதிகம் கவருகின்றன. 

சரி, இப்போது, சுமார் ₹15,000 ₹20,000 விலையில் கிடைக்கும் சிறந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை (Smartphone) பற்றி பார்க்கலாம்.  

சாம்சங் கேலக்ஸி எம் 31 (Samsung Galaxy M31)

சாம்சங்கின் இந்த ஸ்மார்போனில் கேமரா மிகவும் சிறப்பாக உள்ளது. இது 64MP + 8MP + 5MP + 5MP பின்புற கேமரா அமைப்பு உள்ளது, முன் புறக் கேமிரா 32 மெகாபிக்சல்  கேமிரா. இந்த தொலைபேசியில் 6 GB RAM மற்றும் 128 GB சேமிப்பு இடம் உள்ளது. 6.4 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ப்ராஸசர் உடன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ₹16,500.

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 10 Pro Max)

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் ஜியோமியின் இந்த ஸ்மார்ட்போனில் கேமரா  அமசம் மிக சிறப்பாக உள்ளது. இது 108MP + 8MP + 5MP + 2MP  உடன் சிறந்த பின்புற கேமரா அமைப்பையும், 16MP முன் கேமராவையும் கொண்டுள்ளது. 6.67 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த  ஸ்மார்ட் போனில் 6 GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜ் உள்ளது. இந்த தொலைபேசியின் விலை ₹19,999.

ALSO READ | Laptop வாங்க போறீங்களா; நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

ரியல்மீ நர்சோ 30 ப்ரோ (Realme Narzo 30 Pro)

ரியல்மீயின் இந்த தொலைபேசி சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. 48MP + 8MP + 2MP பின்புற கேமரா அமைப்பு மற்றும் 16 MP முன் கேமரா உள்ளது. 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த போனில் 8 GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ₹19,999. 

இன்பினிக்ஸ் ஜீரோ 8i (Infinix Zero 8i)

இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. கேமராவைப் பற்றி கூறினால், இதில் 48MP + 8MP + 2MP + AI லென்ஸின் சிறந்த பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இதில் 16MP + 8MP என இரட்டை முன் கேமராவைக் கொண்டுள்ளது. இது 8  GB RAM மற்றும் 128  GB RAM ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ₹16,000.

 இதில், உங்கள் தேவைக்கேற்ப ஸ்மார்போனை தேர்ந்தெடுக்கலாம். 

ALSO READ | உங்கள் வீட்டு கரண்ட் பில் ஷாக் அடிக்கிறதா; இதோ உங்களுக்கான டிப்ஸ்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News