கோடநாடு கொலை கொள்ளை வழக்கு டிசம்பர் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாணையை டிசம்பர் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா (Late CM Jayalalithaa) அவர்கள் பங்குதாரராக உள்ள கோடநாடு தேயிலை எஸ்டேட் (Kodanad Estate) உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 24-ம் தேதி ஒரு கும்பல் புகுந்து காவலாளியை கொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இந்த கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளியாக கூறப்படும் சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் திருப்புமுனையாக காவல்துறையினர் சயான் மற்றும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீசன், பிஜின் குட்டி ஆகியோரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி தனபால் மற்றும் ரமேஷை போலீஸார் சேலத்தில் வைத்து கைது செய்தனர். இவர்கள் மீது சாட்சிகளை கலைத்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் போன்ற பிரிவுகளில் கைது செய்து நீலகிரி மாவட்டம் கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ALSO READ | அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கோடநாடு வழக்கு திரும்ப விசாரிக்கப்படுகிறது!
இவ்வழக்கு சம்மந்தமாக பல்வேறு திருப்பங்கள் வெளியாகியுள்ள நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்மந்தமான வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ் ஆகிய இருவர் மட்டும் ஆஜராகினர். அரசு தரப்பில் (Tamil Nadu government) சிறப்பு வழக்கிறஞர் ஷாஜகான், அரசு வழக்கறிஞர் ஆனந்த் ஆகியோர் ஆஜராகினர். விசாரணை தொடங்கியதும் மேல் விசாரணை நடைபெற்று வருவதால் கால அவகாசம் தேவை என்ற வாதத்தை முன்வைத்தனர் இதனைத் தொடர்ந்து வழக்கு விசாணையை டிசம்பர் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இதுவரை 81 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ள நிலையில் மேலும் பல முக்கிய நபர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக அரசு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார்.
ALSO READ | கோடநாடு விவகாரம் குறித்து EPS மற்றும் MKS பேசக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR