கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் உட்பட 6 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.  கோடநாடு வழக்கு விசாரணையானது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தனிப்படை போலீசார் 320 பேரிடம் விசாரணை மேற்கொண்டு 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையின் நகல்கள் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும் சிபிசிஐடி புலனாய்வு அதிகாரிகளிடமும் ஒப்படைத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஓபிஎஸ்க்கும் நன்றி! இபிஎஸ்க்கும் நன்றி! எடப்பாடி தரப்பு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த பாஜக 



இந்தநிலையில் கோடநாடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலிசார் ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் 700 க்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்கள் வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  கோடநாடு சம்பவம் நடைபெற்ற போது நீலகிரி மாவட்ட எஸ்பியாக முரளி ரம்பா இருந்துள்ளார்.  அவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்நிலையில் கோடநாடு வழக்கு தொடர்பாக ஆவணங்களை மலையாள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தது தொடர்பாக மணிகண்டனுக்கும் சாட்சிகளின் அடிப்படையில் விசாரணைக்காக கர்சன் செல்வம் மற்றும் ஜெயசீலன் ஆகிய மூன்று பேரை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.



அதன்படி 3 பேரும் நேற்று காலை 10:30 மணி அளவில் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகினர்.  ஆஜராகிய மூன்று பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  அதேபோல மதியத்திற்கு மேல் தலைமை காவலர் ஜேக்கப், உதவி ஆய்வாளர் அர்ஜுனன் - எஸ்டேட் கணக்காளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடமும் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இன்று ஒவ்வொருவரிடமும் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.  இந்த விசாரணையில் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.  


மேலும் படிக்க: அரசியலில் எது நடந்தாலும் இது மட்டும் கண்டிப்பாக நடக்காது - ஜெயக்குமார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ