கொடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் கனகராஜ் அண்ணன் தனபால் சேலத்தில் செய்திகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், " கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் குறித்த விபரங்களை தான் வெளியிட்டதால் தான் மனநலம் பாதிக்கப்பட்டதாக அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.  அவர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். தான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. எந்த நீதிமன்றமும் மருத்துவரும் குறிப்பிடவில்லை. அதற்கான ஆதாரங்கள் இளங்கோவன் தர தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் மீது சொன்ன குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக மீண்டும் மீண்டும் தன் மீது புகார் தெரிவித்து வருகிறார். இது சிபிசி விசாரணைக்கு தடையாக இருக்கும் என்பதால் இதுபோல நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுவதாக தெரிவித்தார். எனக்கு தெரிந்த வகையில் அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மையாக சொல்லி இருக்கிறேன். விசாரணை நடத்த வேண்டியது சிபிசிஐடியின் பொறுப்பு. அவர்  குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை எனில் தன் மீது சிபிசிஐடி போலீஸாரிடம் புகார் தெரிவிக்கட்டும்.  


மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை:முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்


மேலும், தான் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் நல்ல மனநிலையோடு தெரிந்த உண்மைகளை வெளிப்படையாக சொல்லி இருக்கிறேன். தேவைப்பட்டால் சிபிசிடி போலீசார் என்னை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அதற்கு சம்மதிப்பேன். எடப்பாடி பழனிச்சாமி மீது தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தவர், சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க தன்னிடம் பேரம் பேசப்பட்டது. 2000 கோடி வரை தருவதாக அதிமுக பிரமுகர்கள் ஒருவர் தனக்கு வீட்டுக்கு வந்து பேசினார்.


கொடநாடு கொலை கொள்ளை சம்பவங்கள் குறித்த உண்மைகள் தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக தான் போராடி வருகிறேன். தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் காவல்துறை பாதுகாப்பு கேட்டு கடிதம் கொடுத்துள்ளளேன்" என்றும் அவர் தெரிவித்தார்.


மேலும் படிக்க | உதயநிதி தலைக்கு விலை... அவர் போலி சாமியாராக தான் இருக்க வேண்டும் - அண்ணாமலை அதிரடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ