‘ஈ’க்களால் ஊரையே காலி செய்யும் கோவை மக்கள் - உணவு சாப்பிட முடியாமல் தவிப்பு!
Kovai People Affected By Flies : ஈக்களால் ஒரு ஊரே அல்லோலப்பட்டு கிடக்கிறது. சாப்பிட முடியாமல், எந்த வேலைகளையும் செய்ய முடியாமல் அன்னூர் குமாரபாளையம் பகுதி மக்கள் வேதனையில் உள்ளனர்.
அன்னூர் குமாரபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணைகளில் இருந்து வீடுகளுக்கு படையெடுக்கும் ஈக்களால் அப்பகுதி மக்கள் சொந்த வீட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள குமாரபாளையம், சொக்கம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கோழிப்பண்ணைகளில் இருந்து கோழிகள் வளர்க்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் எச்சத்தால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக குற்றம்ச்சாட்டு எழுந்துள்ளது. மேலும்,கோழிப் பண்ணைகளில் இருந்து ஆயிரக்கணக்கில் புறப்படும் ஈக்கள் அருகில் உள்ள வீடுகளில் படையெடுக்கின்றன. அப்படி படையெடுக்கும் ஈக்கள் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பானைகள், உணவுப்பண்டங்கள் உள்ளிட்டவற்றில் விழுகின்றன.
இதனால் உண்ணும் உணவை கூட திறந்து வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல சாப்பிட வாயை திறந்தாலும் வாயை சுற்றி ஈக்கள் மொய்ப்பதால் குழந்தைகள் அதிக அளவு பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஈக்கள் தொல்லையால் அவதியுறும் மக்கள் தங்களது சொந்த வீட்டை காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு சென்று விடுவதாக தெரிகிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கும் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் இன்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கோவை உதவி பொறியாளர் லாவண்யா ஈக்கள் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ள குமாரபாளையம், சொக்கம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணைகளிலும், அரசுப்பள்ளியின் சத்துணவு கூடத்தினையும் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஆய்வு செய்ய வந்தவர்களின் காரையும் ஈக்கள் விடவில்லை. அவர்களது காரிலும் ஆயிரக்கணக்கான ஈக்கள் மொய்த்த காரணத்தால் அவதியுற்ற உதவி பொறியாளர் லாவண்யா, சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணைகளின் உரிமையாளர்களை கண்டறிந்து அவர்களது பண்ணை உரிமம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கோவை அலுவலகத்திற்கு கொண்டு வரச்சொல்லி உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | கிராமங்களுக்குள் படையெடுக்கும் ஈ கூட்டம்.! தொற்று பரவும் அச்சத்தில் மக்கள்
அதேவேளையில் பள்ளி ஆசிரியர்களிடமும் ஈக்கள் தொல்லை குறித்து கேட்டறிந்தார். விரைவில் இப்பகுதி மக்களுக்கு ஒரு விடிவு கிடைத்தால் சரிதான்.!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ