ஒசூர் அருகே நேற்று நடைப்பெற்ற தேரோட்டத்தின் போது, கட்டிடத்தின் மீது சாய்ந்த தேர் மீண்டும் நிமிர்ந்து நின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூரில் 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஒரே ‘பைக்கில்’ 7 பேர் பயணம்!


பாகலூர் உள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேர்திருவிழா நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த தேர்திருவிழா நடைபெறவில்லை. கடந்த 2-ம் தேதி இந்த தேர்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளையுடன் இந்த திருவிழா முடிவடைகிறது.



அங்கு தேரோட்டம் நேற்று முன்தினம் நடைப்பெற்றது. வடக்கு மாசி வீதியில் தேர் வந்தபோது திடீரென வலதுபுரமாக இருந்த கட்டிடத்தின் மீது எதிர்பாராத விதமாக சாய்ந்தது. இதனைக்கண்ட பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளானர். அங்கிருந்தவர்கள் தேர் கீழே விழுந்துவிடுமோ என்ற பயத்தில் கூச்சலிட்டனர். உடனே தேரை இழுத்துச்செல்ல இருந்தவர்கள் தேரை இழுக்க மீண்டும் தேர் நேரானது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.



மேலும் படிக்க | கட்சிக்குள்ளேயே காட்டுக் காட்டிய பாஜகவினர் : வீடியோ வைரல்..!


பாகுபலி படத்தில் ராணா உருவத்தில் செய்யப்பட்டிருக்கும் சிலை கீழே விழும் போது, அதனை அலேக்காக தூக்கி நிறுத்துவது போல இந்த தேரை பக்தர்கள் நிறுத்தியுள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR