கிருஷ்ணகிரி : பாலியல் வழக்கில் கைதான முன்னாள் நாதக நிர்வாகி சிவராமன் தற்கொலை
Krishnagiri, Sivaraman suicide : கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தையும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
Krishnagiri, Sivaraman suicide : கிருஷ்ணகிரியில் போலி என்சிசி வகுப்பு நடத்தி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் கடந்த 19ஆம் தேதி கோவையில் கைது செய்யப்பட்டார். 16 மற்றும் 18 தேதிகளில் தலைமறைவாக இருந்தபோது காவல்துறை தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் சிவராமன் எலிபேஸ்ட் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது அவர் தப்பியோடியதில் கால் முறிவு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராமன் விஷம் அருந்தியதற்கான சிகிச்சையும், கால் முறிவுக்கான சிகிச்சையும் கொடுக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் அங்கும் சிவராமனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால் இன்று அதிகாலை 5.30 மணிக்கு உயிரிழந்தார். இவரது தந்தையும் காவேரிப்பட்டனம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இது குறித்தும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது.
சிவராமன் வழக்கு பின்னணி
கிருஷ்ணகிரி, பர்கூர் பகுதிக்கு அருகில் இருக்கும் கந்திகுப்பத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் என்சிசி முகாம் நடந்தது. அதில் பயிற்சியாளராக சென்ற நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் இந்த முகாமில் கலந்து கொண்ட பள்ளி மாணவிகள் பலருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியையும் அவர் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதனடிப்படையில் விசாரணையை தொடங்கிய காவல்துறை, முன்னாள் நாதக நிர்வாகி சிவராமனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும், பள்ளியின் முதல்வர், தாளாளர் உள்ளிட்ட 11 பேரையும் இதே வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்கவும் குழு அமைத்துள்ளார்.
மேலும் படிக்க | "யானை சின்னம் பயன்படுத்த உரிமை இல்லை” - கொடியை மாற்றுவாரா விஜய்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ