லோக்சபா 2024 தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் தேர்தல் கட்டுபாடுகள் அமலில் இருந்ததால், வணிகர்கள் உள்ளிட்டோர் ரொக்கமாக பணம் எடுத்துச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாடுகளை இப்போது தேர்தல் ஆணையம் விலக்கியுள்ளது வணிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதியான வெள்ளிக்கிழமை 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் கட்டுப்பாடுகள் நீக்கம் குறித்து விளக்கம் அளித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நாடு முழுவதும் 60.03% வாக்குகள் பதிவு... 'இந்த' மாநிலம் தான் அதிகம் - இது பாஜகவுக்கு சாதகமா?


அப்போது பேசிய அவர், தேர்தல் நடைபெறும் மாநில எல்லைகளில் மட்டும் தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுகள் மற்றும் சோதனை தொடரும் என்றார். மாவட்டங்களுக்கு இடையே இருந்த பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அனைத்தும் கலைக்கப்படுவதாகவும் சத்யபிரதா சாகு கூறினார். அதாவது, தொகுதிகளுக்குள் நடைபெற்று வந்த வாகன சோதனை, மாவட்ட எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகளில் நடைபெற்ற சோதனைகள் எல்லாம் இனி இருக்காது. அதேபோல், பண எடுத்துச் செல்ல இருந்த தடையும் தமிழ்நாட்டுக்குள் இருக்காது. ஆனால் மாநில எல்லைப் பகுதிகளில் இந்த சோதனை இருக்கும்.


இதற்கு தமிழ்நாடு வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தேர்தல் கட்டுபாடுகளால் உரிய தொகையை எடுத்துச் செல்வதில் பெரும் சிரமங்களை சந்தித்து வந்ததாகவும், இப்போது அந்த கட்டுபாடுகள் நீங்கியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " தமிழகத்தில் நேற்று நாடாளுமன்றத் தேர்தல்  நிறைவு பெற்றது. நாட்டின் பிற மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று தேர்தல் நிறைவு பெற்றதால், மக்கள் வழக்கம் போல் பணத்தை எடுத்துச் செல்வதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்  என வணிகர்கள், தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.


இந்நிலையில் நேற்று தமிழகத்தில் தேர்தல் நிறைவு பெற்றுவிட்டபடியால், பொதுமக்கள், வணிகர்கள் ஏற்கனவே இருந்தவாறு பணத்தை எடுத்துச் செல்வதில் எந்த கட்டுப்பாடும் இல்லை என அறிவித்துள்ளனர். அதே நேரம் மாநில எல்லைகளில்  உரிய ஆவணம் இன்றி பணம் எடுத்துச் சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை கும்பகோணத்தில் உள்ள அனைத்து தொழில் வணிகர்கள் கூட்டமைப்பு வரவேற்கிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | தமிழ்நாட்டில் மொத்த வாக்குப்பதிவு எவ்வளவு...? சென்னையில் சாதனையா? - முழு விவரம் உள்ளே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ