குன்றத்தூர் அடுத்த கலெடிபேட்டை அம்பேத்கர் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் 45 வயதான ரமேஷ். தனியார் கிளப்பில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி 42 வயதான அலமேலு, பள்ளி ஆசிரியரான இவர் வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், மகள்கள் இருவரும் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டனர். அப்போது, வீட்டில் ரமேஷ் மற்றும் அவரது மனைவி அலமேலு மட்டும் இருந்தனர். மதிய நேரத்தில் வீட்டில் இருந்து அலமேலுவின் பலத்த அலறல் சத்தம் கேட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


அப்போது, அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்ற போது திடீரென்று கதவை திறந்த ரமேஷ், அங்கிருந்து தப்பியோடினார். பிறகு வெளியே நின்றிருந்த அக்கம், பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அலமேலு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதிர்ச்சியடைந்தவர்கள் உடனே குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்தது, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொலை செய்யப்பட்டுக் கிடந்த அலமேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



பின்னர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ரமேஷை பிடிக்க தனிப்படை அமைத்தனர். ஆனால் சில மணி நேரங்களில் ரமேஷ் போலீஸில் சரண் அடைந்தார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கொலைக்கான காரணம் வெளிச்சத்திற்கு வந்தது. மனைவியின் நடத்தையில் ரமேசுக்கு அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டது. ஏற்பட்டு வந்துள்ளதால் கணவன், மனைவியை அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அலமேலு அயனாவரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.



மேலும் படிக்க | போலி கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கர் மூலம் நூதன பண மோசடி! ஊர்காவல் படை வீரர் கைது


அங்கிருந்து சமாதானம் பேசி நேற்று முன்தினம் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டிலிருந்த கடப்பாரை எடுத்து மனைவியின் தலையில் அடித்து கொலை செய்தார். இதனிடையே, மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தில் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் காவலர் தெரிவித்தனர். 


மேலும் படிக்க | உணவு டெலிவரி ஊழியரை அடித்து பணம் பறித்த கும்பல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ