44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்து உள்ள மாமல்ல்புரத்தில் இன்று தொடங்குகிறது. இதனையொட்டி தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் வருகை தந்திருப்பதால் அவர்களுக்கான அறை ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களை எந்த சொதப்பலும் இல்லாமல் செய்திருக்கிறது அரசு. தமிழக அரசின் ஏற்பாடுகளை பார்த்த சர்வதேச வீரர்கள் பலரும் இதுபோல் ஏற்பாடை இதற்கு முன்னர் பார்த்தது இல்லை என புகழாரம் சூட்டுகின்றனர். அதேசமயம், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை தமிழக அரசு வேண்டுமென்றே புறக்கணிக்கிறதென பாஜகவினர் தொடர்ந்து கூறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


அந்தவகையில் நடிகை குஷ்பூ இவ்விவகாரம் தொடர்பாக பேசுகையில், “சர்வதேச செஸ் போட்டி தமிழகத்தில் நடைபெறுவது தமிழ்நாட்டுக்கு பெருமை. ஆனால் இந்த பெருமை கிடைக்க உதவியது மத்திய அரசு. மத்திய அரசு அனுமதித்து இருக்காவிட்டால் போட்டி இங்கு நடந்திருக்குமா? சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் நாட்டின் பிரதமர் படத்தை போடாததில் இருந்தே தி.மு.க.வின் மனநிலை தெரிந்துவிட்டது. 


மேலும் படிக்க  | எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்றால் அப்ப நான் யார் ? - ஜெயலலிதா கேட்பது போன்ற போஸ்டர் வைரல்


மோடி பாரதிய ஜனதாவுக்கு மட்டுமல்ல. திமுக உள்பட இந்த நாட்டுக்கே பிரதமர். நாங்கள் போட சொல்வது பாஜக தலைவர் படத்தை அல்ல. நாட்டின் பிரதமர் படத்தை. பிரதமருக்கு மரியாதை கொடுக்க தெரியாத அரசாக இந்த அரசு உள்ளது. பண்பாடு, நாகரீகம், மரியாதை கொடுக்க தெரியாத திமுக. அரசால் தமிழ்நாட்டுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பிரதமரை வரவேற்க செல்லவில்லை. அவருக்கும் தமிழக முதல்-அமைச்சருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர் பகிரங்கமாக வெளிக்காட்டினார். திமுக அரசு மறைமுகமாக வெளிப்படுத்துகிறது” என்றார்.


மேலும் படிக்க | செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர்


மேலும் படிக்க | தமிழ் இருக்கைகளில் தமிழ்ப் பேராசிரியர்களின் நியமனம் அவசியம்: வைகோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ