தேச பாதுகாப்பில் விளையாடாதீர்கள் - திமுகவுக்கு முருகன் எச்சரிக்கை
தேச பாதுகாப்பில் திமுக விளையாடக்கூடாது என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இரண்டு நாள்களாக தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக கோவை, திண்டுக்கல், மேட்டுப்பாளையம், திருச்சி, பொள்ளாச்சி, தாம்பரம், ஈரோடு போன்ற பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் இந்து இயக்கத்திற்காக வேலை செய்கின்ற நிர்வாகிகள், அவர்களுடைய வீடுகள், வாகனங்கள், தொழில் செய்யும் பகுதிகளை குறி வைத்து கடுமையான தாக்குதல்களை ஒரு கும்பல் நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு அரசாங்கம் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த செயல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் கேட்டுக்கொள்வதுடன், இரண்டு நாட்களுக்கு முன்னால் நாடு முழுவதுமே என்.ஐ.ஏ. சோதனையானது நடைபெற்றது. அந்த சோதனையில் தேசத்துக்கு எதிராக, இந்த நாட்டினுடைய பாதுகாப்புக்கு எதிராக, இந்த நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிற, பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
மேலும் படிக்க | ஆன்மிக அறிவியல் ஆராய்ச்சி - ஆதீனத்தை சந்தித்த இஸ்ரோ முன்னாள் தலைவர்
ஆனால் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் என்.ஐ.ஏ.வை தவறுதலாக பயன்படுத்தியதாக சொல்லி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக தேச பாதுகாப்பில் விளையாடக்கூடாது. தேசத்தினுடைய பாதுகாப்பு, நாட்டினுடைய பாதுகாப்பு குறித்து நாட்டின் ஏஜென்சிகளின் அளித்த ஆதாரங்களை கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுத்து கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் பலவிதமான ஆதாரங்களை கைப்பற்றி உள்ளனர்.
இப்படி இருக்கும் பட்சத்தில் திமுக ஒரு தவறான வாக்கு வங்கி அரசியலை செய்யக்கூடாது. தேச பாதுகாப்பு முக்கியம். பாஜக மற்றும் இந்து இயக்கங்களை சேர்ந்த சகோதரர்கள் மீது நடக்கின்ற தாக்குதல் மீது தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ