ஆன்மிக அறிவியல் ஆராய்ச்சி - ஆதீனத்தை சந்தித்த இஸ்ரோ முன்னாள் தலைவர்

தருமபுரம் ஆதீனகர்த்தரை இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சந்தித்து அருளாசி பெற்றார். இந்தியாவின் மொத்த தேவையில் 90 சதவீதம் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது எனவும் சிவன் தெரிவித்தார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 24, 2022, 06:54 PM IST
  • தருமபுரம் ஆதீனத்தை சந்தித்தார் இஸ்ரோ சிவன்
  • ஆன்மிக அறிவியல் குறித்த ஆராய்ச்சிக்கு வலியுறுத்தியுள்ளார்
  • இந்தியாவின் மொத்த தேவையில் 90 சதவீதம் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது என பெருமிதம்
ஆன்மிக அறிவியல் ஆராய்ச்சி - ஆதீனத்தை சந்தித்த இஸ்ரோ முன்னாள் தலைவர்

மயிலாடுதுறை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இன்று காலை இஸ்ரோ விக்ரம் சாராபாய் சிறப்பு பேராசிரியரும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான  டாக்டர் சிவன் தனது மனைவி மாலதியுடன் ஆயுஸ் ஹோமத்தில் பங்கேற்றார். இதையடுத்து, மயிலாடுதுறையில் உள்ள பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்துக்கு வந்த அவர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார். அவருக்கு ஆதீனகர்த்தர் திருக்குறள் விளக்கவுரை புத்தகத்தை வழங்கி அருளாசி கூறினார். 

தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், “தருமபுரம் ஆதீனம் நாட்டு மக்களுக்கும், இளைஞர்களுக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் பல சேவைகளை செய்து வருகிறது. இஸ்ரோவும் இதுபோல சேவை நோக்கத்தோடு தொடங்கப்பட்டதுதான். தற்போது பெரிய ஆலமரமாக வளர்ந்து இந்திய மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. தருமபுரம் ஆதீனத்தின் சேவை மூலமாக புதிய வேலைவாய்ப்புகளும், புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளும் உண்டாகும். பாரத பிரதமர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள் வேண்டும் என்று கூறியுள்ளார். பிரதமரின் முயற்சிகளுக்கு தருமபுரம் ஆதீனத்தின் பணிகளும் முக்கிய பங்காற்றுவதாக எனக்குத் தெரிகிறது. 

மேலும் படிக்க | சிலை கடத்தல் வழக்கு... ஆஜராகவில்லை என்றால் தள்ளுபடி செய்யப்படும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்தியா உலகளவில் முதலிடத்தை பிடிக்கக்கூடிய நாள் வெகுதூரத்தில் இல்லை. அதற்கான முயற்சியில் மாநில, மத்திய அரசுகள் முறையாக செயல்பட்டு முன்னேறி வருகிறோம். புதிய கண்டுபிடிப்புகளை செய்வது அறிவியல். அறிவியல் வளர்ச்சியில் ஆன்மீகம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதற்கான ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும். அறிவியல் துறை என்பது ஸ்பேஸ் டெக்னாலஜி மட்டும் கிடையாது. விவசாயம் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் அறிவியல் உண்டு. பிரதமரின் முயற்சியால் அனைத்துத் துறைகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது. வெகுவிரைவில் தன்னிறைவு அடைவோம்.

வெளிநாடுகளில் இருந்து ரபேல் விமானம் போன்ற கொள்முதல் செய்து வருகிறோம். ஆனால் உள்நாட்டிலேயே அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மொத்த தேவையில் அனைத்தையுமே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தது போய், தற்போது 90 சதவீதம் வரை நாமே தயாரித்து வருகிறோம். விரைவில் 100 சதவீதம் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். மாணவர்களுக்கு ஏராளமான துறைகளில் தேவைகளும், வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன” என்றார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News