மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் வசித்து வருபவர் ரமணி. இவருக்கு ரவிச்சந்திரன் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி 11 மாத கைக்குழந்தையாக இருக்கும்போது ரமணியின் கணவர், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 


கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு உறவினர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில் குடும்பத்தை காப்பாற்ற மயிலாடுதுறை மீன் மார்க்கெட்டில் மீன் கறியை வெட்டிக்கொடுத்து, கழுவி சுத்தம் செய்து கொடுக்கும் கூலி வேலைக்கு சென்றார். 


மேலும் படிக்க | வெந்து தணிந்தது காடு... 'மாநாடு' படத்தை 100 கோடி வசூல் லிஸ்ட்டுல போடு!



மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குபவர்கள் தரும் மீன்களை உரசி செதில்கள் நீக்கி அதை துண்டு துண்டாக வெட்டி சுத்தம் செய்து கொடுப்பது இவரது பணியாகும். மேலும், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலுக்கு மீன்களை சுத்தம் செய்து தரும் பணியையும் செய்து வருகிறார்.


இந்த பணி மூலமும், தன் நகைகள், வீடுகளை விற்றும் தன் மகளை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்து தற்போது மருத்துவர் ஆக்கியுள்ளார்.   


இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணி மற்றும் இயந்திர நெல் நடவு பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 


அப்போது பெண்மணி ரமணி மற்றும் அவரது மகள் விஜயலட்சுமியும் மகன் ரவி ஆகியோரை நேரில் அழைத்து முதல்வர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.



மேலும் படிக்க | ரூல்ஸ் மீறப்படும்... விக்ரம் படத்தில் ஃபஹத் பாசிலின் கேரக்டர் பெயர் என்ன?.. வெளியானது அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR