கோவை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு அவரது பிரச்சாரத்தை துவக்கினார்.இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, இது ஒரு வித்தியாசமான தேர்தல். 10 ஆண்டுகளாக பிரதமரின் தொலை நோக்கு பார்வை எழுச்சியை காட்டுகிறது. பிரதமர் 400 எம்பி களை தாண்டி அமர வேண்டும். 70 ஆண்டுகளாக அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படாத விஷயங்கள் இந்த 5 ஆண்டுகளில் எடுக்கப்பட்டது.  இந்தியாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு பிரதமர் மோடியை மீண்டும் அமர வைக்க வேண்டும். பிரதமருக்கு போட்டியாளர்கள் இல்லை. கோவையை பொருத்தவரை 20 ஆண்டுகளாக வளர்ச்சி தொய்வில் இருக்கிறோம். கம்யூனிஸ்ட் எம்பியால் கோவை வளர்ச்சி பின் நோக்கி சென்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள்... எந்த தொகுதியில் அதிகம் பேர் போட்டியிடுகின்றனர்?


1440 கோடி மதிப்பிலான ஸ்மாட் சிட்டியை பார்க்க ஆள் இல்லை. உங்கள் தம்பி அண்ணாமலை அன்பை கோருகிறேன்.பல்வேறு கட்சியினர் அனைவரும் ஒரு சேர வந்துள்ளார்கள். ஒவ்வொருவர் வீட்டிற்கும் செல்ல வேண்டிய கடமை உள்ளது.இந்த வண்டி தான் டெல்லி போகின்ற வண்டி. அண்ணாமலை என்கின்ற ஒரே டிரைவர் தான் இருக்கிறேன்.வேறு யாரும் இல்லை.கோவை IOB காலணியில் குப்பை சுத்திகரிப்பு நிலையம் வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை உள்ளது.திமுக ஆட்சியில் குப்பைகளை தூய்மை செய்வதில் நாம் கீழே சென்று கொண்டிருக்கிறோம்.குப்பை மேலாண்மைக்கு உத்திரவாதம் அளிக்கிறோம் என தெரிவித்தார்.


மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் செய்த எல். முருகன்!


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று நீலகிரி நாடாளுமன்ற பா. ஜ. க வேட்பாளரும் மத்திய இனை அமைச்சருமான எல். முருகன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து விட்டு பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை எல். முருகன் துவக்கி துவங்கினார். முன்னதாக வேட்பாளர் எல். முருகனுக்கு பா. ஜ. க நிர்வாகிகள் சார்பில் மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வாகனத்தில் இருந்தவாறு பிரச்சாரம் செய்த எல். முருகன் அப்போது பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த ஆட்சி நிர்வாகத்தின் மூலம் ஏழைகளாக இருந்த 25 கோடி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி 25 கோடி மக்களை நடுத்தர வர்க்கமாக மாற்றியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.


மேலும் அனைவருக்கும் வீடு, கேஸ் இணைப்பு வழங்கியதோடு அனைவருக்கும் குடி நீர் இணைப்பு பெற ஜல்ஜீவன் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் தமிழகத்தில் திமுக அரசு அதனை முறையாக கையாளாமல் மக்களுக்கு குடிநீர் பிரச்சையை ஏற்படுத்தி மக்களை அவதிப்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அப்போது எல்லாம் குடி நீர் பஞ்சம் தலைவரித்து ஆடுகிறது திமுக ஆட்சி ஒரு சாபக்கேடு என விமர்சித்ததுடன்   திமுக ஒரு ஊழல், லஞ்சம் அடங்கிய ஆட்சி என கடுமையாக விமர்சித்தார் மேட்டுப்பாளையத்தில் வற்றாத ஜீவநதியான பவானி ஆற்றினை மாசுபடுத்தி மக்கள் குடி நீரை மாசுபடுத்தி வருவதாக கூறினார்.


மேலும் படிக்க | பாஜகவில் இருக்கும் ரவுடிகளை பட்டியல் போட்டு விளாசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ