தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள்... எந்த தொகுதியில் அதிகம் பேர் போட்டியிடுகின்றனர்?

Total Candidates Contesting In Tamil Nadu: தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளிலும் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று உறுதியாகி உள்ளது. அந்த வகையில், இதில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை இதில் தெரிந்துகொள்ளலாம்.

  • Mar 31, 2024, 00:35 AM IST

39 தொகுதிகளில் மொத்தம் எத்தனை பேர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர், எந்த தொகுதியில் அதிகமானோர் போட்டியிடுகின்றனர், எதில் குறைவான நபர்கள் போட்டியிடுகின்றனர் உள்ளிட்ட முக்கிய தகவல்களை இங்கு காணலாம்.

1 /7

மக்களவை தேர்தலையொட்டி (Lok Sabha Election 2024), கடந்த மார்ச் 20ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், மார்ச் 28ஆம் தேதியோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இன்றுடன் அதனை திரும்பப் பெறும் அவகாசம் நிறைவடைந்து, இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது.   

2 /7

தமிழ்நாட்டில் மொத்தம் 39 தொகுதிகளிலும் வரும் ஏப்.19ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் ஜூன் 4ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இங்கு திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது.     

3 /7

அந்த வகையில், மொத்தம் 39 தொகுதிகளில் மார்ச் 28ஆம் தேதி வரை தகுதிவாய்ந்த 1085 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.   

4 /7

1085 வேட்பாளர்களில் 135 பேர் தங்களின் வேட்புமனுவை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதன்மூலம், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

5 /7

இந்த 950 வேட்பாளர்களில் 874 பேர் ஆண்கள் மற்றும் 76 பேர் பெண்கள் ஆவார். தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர்கள் யாரும் போட்டியிடவில்லை.   

6 /7

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் மட்டும் 54 பேர் களம் இறங்கி உள்ளனர். அதில், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, பாஜக சார்பில் வி.வி.செந்தில்நாதன், அதிமுக சார்பில் கே.ஆர்.எல்.தங்கவேல் உள்ளிட்டோர் முன்னணி வேட்பாளராக உள்ளனர்.   

7 /7

நாகப்பட்டினம் தொகுதியில் வெறும் 9 வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர். இதுதான் குறைந்த வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாகும்.