கள்ளக்குறிச்சி சம்பவத்தை முதல்வர் திசை திருப்புகிறார்-கார்த்தியாயினி குற்றச்சாட்டு!
Latest News BJP State General Secretary Karthiyayini Accuses CM MK Stalin : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை-பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி வேலூரில் பேட்டி
Latest News BJP State General Secretary Karthiyayini Accuses CM MK Stalin : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆளுநரிடம் புகார் மனு அளித்திருப்பதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி வேலூரில் பேட்டி
வேலூரில் பேட்டி:
வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் இன்று பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறுகையில், “1975 ஜூன் மாதம் 25-ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் கொண்டு வந்தார் . எந்த ஒரு முன்னறிவிப்பும் அவசர நிலை பிரகடனம் செய்தார். நீதித்துறையினை தன் வசம் கொண்டுவருதற்கான அத்தனை முயற்சிகளும் கொண்டுவரப்பட்டது மேலும் மக்களுடைய சுதந்திரத்தை அழிக்கின்ற வகையில் அராஜக போக்கில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. இவற்றை எதிர்க்கட்சிகள் தட்டிக் கேட்டபோது அவர்களை எல்லாம் கைது செய்தார்கள். காங்கிரஸ் என்றால் சுயநலம், ஊழல்,மக்கள் விரோத ஆட்சி என்பதனை வெளிப்படும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அவசர நிலை பிரகடனம் சம்பவத்தை மக்களுக்கு பாஜக தெரியப்படுத்தி வருகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தினால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது தமிழக அரசு மக்களுக்கு விடியல் என்றில்லாமல் மரணத்தின் மூலமாக புள்ளி வைத்துக் கொண்டிருக்கும் திமுக அரசும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும், “ சட்டசபையில் பேசுவதற்கு அனுமதியும் கிடையது. உடனடியாக அவர்களை வெளியேற்றம் செய்வதற்கான கவனத்தை மட்டும் தான் கொடுக்கின்றார்களே தவிர தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு தனக்காக ஆட்சி அமைத்துக் கொடுத்த மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் திமுக அரசு செய்யவில்லை. கள்ளக்குறிச்சி மக்களை நேரடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் சந்திக்கவில்லைமதுவிலக்கு துறை அமைச்சரையும் கள்ளக்குறிச்சிக்கு இன்னும் செல்லவில்லை. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பினை ஏற்றுக்கொண்டு மதுவிலக்கு துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் செய்தது.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி விவகாரம் : 59பேர் உயிரிழப்பு.. தேமுதிகவினர் ஆர்பாட்டம்
இதில் பெண்கள் இரவு 10 மணி வரை மண்டபத்தில் கைது செய்து வைத்திருந்தார்கள் பாதுகாப்பு நலன் கருதி பெண்களை 8 மணிக்குள் விடுதலை செய்திருக்க வேண்டும். வேண்டும் என்றே இரவு 10.30 மணி வரை மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்” என்று கூறினார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆளுநரிடம் சிபிஐ விசாரணை கோரி மனு அளித்திருப்பதாகவும் சட்டசபையில் கள்ளக்குறிச்சி சம்பவத்தை குறித்து பேச முழுமையாக அனுமதி அளிக்கப்படவில்லை என்றால் அதன் முழு சம்பவம் முதலமைச்சருக்கு தெரிந்திருக்கும் கடந்த 19 தேதி அன்று கண் பார்வை தெரியவில்லை என்று அப்பொழுது மக்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர் கள்ளக்குறிச்சி சம்பவத்தை திசை திருப்பும் முயற்சிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறினார்.
மேலும் படிக்க | கருணாநிதி ஆட்சி காலத்தில் இருந்து கள்ளச்சாரம் இருக்கிறது - தேமுதிக குற்றச்சாட்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ