புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், அதிமுக வடக்கு மாவட்ட கழக செயலாளருமான டாக்டர் .சி. விஜயபாஸ்கர் இல்லத்தில் அமலாக்க துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று வாகனங்களில் வந்த அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொள்கின்றனர். தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர். சி .விஜயபாஸ்கர். இவர் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்தாக கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வருமான வரித்துறையினர் இவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். பின்னர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தற்பொழுது அந்த வழக்கானது புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு எதுவுமே செய்யாத ஒரே முதல்வர் எடப்பாடி: கனிமொழி


இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் இல்லத்தில் இன்று காலை முதல் அமலாக்க துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். மதுரை, சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து எட்டுக்கும் அதிகமான அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக கூட்டணியில் அதிமுக சேர மறுத்துவிட்டது. மேலும், அதிமுக தலைமையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட இருக்கிறது.


இது டெல்லி பாஜக மேலிடத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமர் மோடி அண்மையில் தமிழ்நாடு வந்தபோது திமுகவை கடுமையாக விமர்சித்தாரே தவிர கிஞ்சித்தும் அதிமுகவைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை வெகுவாக புகழ்ந்து பேசினார். அப்போதே, பாஜக அதிமுக கூட்டணியை விரும்புகிறது என்பது தெளிவாக தெரிந்தது. ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. அவரின் தொடர்ச்சியாக விமர்சனங்களால் பாஜக கூட்டணியை விட்டு விலகியது அதிமுக.


இருப்பினும் டெல்லி பாஜக மேலிடம் தங்கள் கூட்டணிக்கு அதிமுக வர வேண்டும் என இன்னும் விரும்புகிறது. இதனை கருத்தில் கொள்ளாத அதிமுக மற்றும் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்கட்ட வேட்பாளரையே அறிவித்துவிட்டார். இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கும் நிலையில் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. அவர் மீது குட்கா வழக்கும் இன்னும் பெண்டிங்கில் இருக்கிறது. வழக்குகள் தலைக்குமேல் தொங்குவதால் அவரை பாஜக டார்கெட் செய்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.


இந்த சோதனைக்குப் பிறகாவது அதிமுக நிலைப்பாட்டில் மாற்றம் வருமா? அல்லது தொடர்ந்து பாஜக கூட்டணியில் இணையமாட்டோம் என்ற முடிவில் உறுதியாக இருக்கப்போகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கூட்டணியை உறுதி செய்ய இன்னும் காலவகாசம் இருப்பதால், எந்நேரமும் எந்த மாற்றமும் ஏற்படலாம் என்கிறது அரசியல் வட்டாரம். அதிமுக - பாஜக கூட்டணிக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | ’மாட்டுக்கறி திங்கிற பொறுக்கி நாய்களே’ நாமக்கல் திமுக கூட்டணி வேட்பாளர் சர்ச்சை பேச்சுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ