’மாட்டுக்கறி திங்கிற பொறுக்கி நாய்களே’ நாமக்கல் திமுக கூட்டணி வேட்பாளர் சர்ச்சை பேச்சுகள்

DMK Alliance Namakkal Candidate KMDK Suryamoorthi: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் சூரியகுமாரின் ஜாதிவெறி பேச்சுகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களை எல்லாம் மாட்டுக்கறி திங்கிற நாய்களே, பொறுக்கி நாய்களே என அருவறுக்கத்தக்க வகையில் அவர் பேசியிருக்கிறார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 21, 2024, 08:31 AM IST
  • நாமக்கல் வேட்பாளரின் ஜாதிவெறி பேச்சு
  • கொமதேக வேட்பாளருக்கு திமுக ஆதரவு
  • உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்க உள்ளார்
’மாட்டுக்கறி திங்கிற பொறுக்கி நாய்களே’ நாமக்கல் திமுக கூட்டணி வேட்பாளர் சர்ச்சை பேச்சுகள் title=

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் கொமதேக இளைஞரணி செயலாளர் சூரியகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரை மாற்ற வேண்டும், வேறொருவரை களமிறக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அதற்கு காரணம், கடந்த காலங்களில் அவர் பங்கேற்ற போராட்டங்களில் எல்லாம் பேசிய ஜாதிவெறி பேச்சுகள் தான். ஆவண கொலையை ஆதரித்தும், தங்கள் சமூக பெண்களை மாற்று சமுதாயத்தினர் கரம் பிடித்தால் தாங்களே கொலை செய்துவிட்டு சிறை செல்லவும் தயராக இருக்கிறோம், அதற்காக மிகப்பெரிய இளைஞர் படையை தயார் செய்து வைத்திருக்கிறோம் என்று பேசிய வீடியோ வைரலானது.

மேலும் படிக்க | ’ஜாதிவெறி பேச்சு’ நாமக்கல் வேட்பாளரை மாற்ற கோரிக்கை! திமுக தலைமை கவனிக்குமா?

ஆனால், அந்த வீடியோ வெட்டி ஒட்டப்பட்ட எதிர்க்கட்சிகள் திரித்து பரப்பியது என சூரியகுமார் விளக்கம் அளித்திருந்தார். ஒருவேளை இருக்கலாம் என பலர் நினைத்திருந்த நேரத்தில் அவர் பங்கேற்ற போராட்டங்கள், மேடைகளில் எல்லாம் ஜாதிவெறியை கக்கியிருக்கிறார். சூரியமூர்த்தி சார்ந்த சமூகம் இளைஞர்களும் இதனை செய்ய வேண்டும் என வற்புறுத்தியிருக்கிறார். கோயில் உரிமை மீட்பு போராட்டம் என்றொரு போராட்டத்தில் பங்கேற்று பேசியிருக்கும் சூரியமூர்த்தி, " அமைதியா இருக்கிற இடத்தில ஏன் வந்து ஆலயம் நுழைவு போராட்டம் அப்படினு பிரச்சனை பண்றீங்க, நாங்க எல்லாம் பொழப்பு பார்க்குறவங்க, நீங்க எல்லாம் பொறுக்கி திங்கிற நாய்ங்க. நாங்கள் எல்லாம் சாமி ரூமுக்கு குளிச்சிட்டு தான் போவோம். மாட்டுக்கறிய வீட்டுக்குள்ள வச்சி திங்கிற நீ எங்க கோயிலுக்குள்ள வந்து சாமிகும்பிடலாம்னு நினைக்கிறது எப்படி சரியாக இருக்கும்?" என பேசியிருக்கிறார்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கூட்டத்தில் சூரியகுமார் பேசும்போது, சாதி மறுப்பு திருணம் செய்ய நாங்கள் ஒருபோதும் அனுமதிக்காது என தெரிவித்துள்ளார். இன்னொரு கூட்டத்தில் பேசும்போது, தங்கள் சமூக பெண்களை காதலிப்பவர்களை வெட்டி வீழ்த்துவோம் என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் இம்மாதிரியான ஜாதிவெறி பேச்சுக்களை பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களை மட்டுமல்லாது அவர் சாராத பிற சமூகங்களில் திருமணம் செய்வது குறித்தும் தொடர்ச்சியாக வன்மங்களை கக்கியிருக்கிறார்.

சூரியகுமார் வெறுப்பு பேச்சுகள் எல்லாம் இப்போது நாமக்கல் தொகுதியில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களிடையேயும் வீடியோவாக சென்று சேர்ந்திருக்கிறது. இவர் வெற்றி பெற்றால் நாளை தாழ்த்தப்பட்ட மக்களை இவர் எப்படி நடத்துவார் என்பது பட்டவர்த்தனமாக அவரின் பேச்சுகள் மூலமே அறிய முடிகிறது. குறைந்தபட்சம் ஒரு கோரிக்கையை கூட ஒரு எம்பி என்ற அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்கள் இவரிடம் எப்படி கொடுக்க முடியும்?, அப்போது அவரின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? என்றெல்லாம் கேள்வி எழுப்புகின்றனர். சாதி ஒழிப்பை பற்றி பேசும் திமுக, ஜாதிவெறி ஊறிப்போய் இருக்கும் சூரியகுமாரை தங்களுடைய சொந்த சின்னத்தில் நிற்க வைத்து வெற்றிபெற வைக்கப்போகிறதா? என்ற கேள்வியையும் தொகுதி மக்கள் எழுப்புகின்றனர்.

சாதியை உயிராய் நினைக்கும் சூரியகுமார் இப்போது அவரின் சொந்த சாதி வாக்குகளை மட்டும் வைத்து வெற்றி பெற்றுவிடுவாரா? என்ற கேள்வி எழுப்பும் அரசியல் விமர்சகர்கள், கூட்டணி கட்சியின் தேர்தல் வெற்றி மட்டுமே முக்கியம் என திமுக இதனை கண்டுகொள்ளாமல் சென்றால் இதற்கான விலையை திமுக தான் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை மணியை கொடுத்திருக்கின்றனர். நாமக்கல் தொகுதி வேட்பாளர் சூரியகுமார் மாற்றப்பட வேண்டும் என்பதே பலரும் திமுகவுக்கு வைக்கும் கோரிக்கையாக இருக்கிறது.

மேலும் படிக்க | பாஜக கொடுத்த பெரிய ஆஃபர்.. பெரிய மனசோடு வேண்டாம் என சொன்ன டிடிவி தினகரன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News