‘திருடர்கள் ஜாக்கிரதை’ வித்தியாசமான திருமண பேனர்! வியந்து பார்த்த பொது மக்கள்..
Funny Tamil Banner : வித்தியாசமாக செய்தித்தாள் முறையில் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்ட கல்யாண பேனரை அப்பகுதி மக்கள் வியர்ந்து பார்த்து செல்கின்றனர்....
Funny Tamil Banner : “வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை செய்து பார்” என்று கூறுவர். ஒரு கல்யாணத்தை முடிப்பதற்கும் போதும் போதும் என்றாகிவிடும். இதற்கு பத்திரிக்கையிலேயே, “அவங்க பேரு விட்டுப்போச்சு..இவங்க பேரு விட்டுப்போச்சு..” என்று பிரச்சனைகள் வரும். ஆனால், இதையே வித்தியாசமாக ஒரு பேனராக அடித்தால்? அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது நிகழ்ந்திருக்கிறது. ஒரு இளம் ஜோடி திருமணம் செய்து கொள்ள, அதனை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் நாளிதழ் போல பேனர் அடித்து வைத்திருப்பது போவோர் வருவோரை நகைப்புக்குள்ளாக்கியிருக்கிறது.
திருவண்ணாமலை அடுத்த சாணானந்தல் கிராமத்தில் வசிப்பவர் நந்தகுமார், இவருக்கும் அரும்பாக்கம்புதூர் கிராமத்தை சேர்ந்த பேபி என்ற பெண்மணிக்கும் இன்று காலையில் திருமணம் நடைபெற்றது.
இதற்காக மணமகனின் நண்பர்கள் செய்தித்தாள் வடிவில் திருமண நாளிதழ் இதில் தலைப்பு செய்திகள், சோகத்தில் மாமன்மார்கள், திருமண விழாவில் சரக்கு கேட்டு கலவரம், சமையல் காண்ட்ராக்டர் வழங்கியதில் சிக்கல், ஆதார் அட்டை கட்டாயம், விளையாட்டு செய்திகள், திருடர்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளுடன் கொண்டு வித்தியாசமான முறையில் திருமண பேனர் அடித்து வைத்துள்ளனர்.
செய்தித்தாள் வடிவில் வைத்துள்ள திருமண பேனர் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் ஆச்சிரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது, குறிப்பாக செய்தித்தாள் வடிவில் வடிவமைப்பு செய்துள்ளது தொடர்ந்து செய்தித்தாள் மக்களின் மனதில் எந்த அளவுக்கு ஆழமாக பதிந்துள்ளது என்பதை காட்டுகிறது.
மேலும் படிக்க | சீரூடையில் இருந்த பெண் காவலர்... சராமாரியாக அரிவாளால் வெட்டிய கணவர் - கொடூரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ