சீரூடையில் இருந்த பெண் காவலர்... சராமாரியாக அரிவாளால் வெட்டிய கணவர் - கொடூரம்!

Attack On Kancheepuram Lady Police: காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலரை அடையாளம் தெரியாத நபர் அரிவாளால் வெட்டியுள்ளார். தாக்குதல் நடத்தியவர் அவரின் கணவர் என்றும் கூறப்படுகிறது. 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sudharsan G | Last Updated : Jun 17, 2024, 05:06 PM IST
  • அந்த பெண் காவலரின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
  • கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு பெண் கணவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
  • பெண் காவலருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீரூடையில் இருந்த பெண் காவலர்... சராமாரியாக அரிவாளால் வெட்டிய கணவர் - கொடூரம்! title=

Attack On Kancheepuram Lady Police: காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டில்லி ராணி. இவர் காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் மேகநாதன். தம்பதியர் இருவருக்கும் 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், பெண் காவலர் டில்லிராணி இன்று வழக்கம் போல் தனது பணியினை முடித்து விட்டு காவல் நிலையத்தில் இருந்து பிற்பகல் வேளையில் தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பெரிய காஞ்சிபுரம் சாலை தெரு பகுதியில் உள்ள இந்தியன் வங்கி அருகே வந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கண் இமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சீருடையில் இருந்த டில்லிராணியை சரமாரியாக வெட்டி கொடூர தாக்குதலில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சிகிச்சையில் டில்லிராணி

எதிர்பாராத விதமாக நடந்த இந்த கொடூர தாக்குதலில் பெண் காவலர் டில்லிராணியின் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தும், 108 ஆம்பூலன்ஸ் வாகனம் மூலம் பெண் காவலர் டில்லிராணியை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண் காவலர் டில்லிராணிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | நில மோசடி வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கர்! விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!

கணவர் மீது சந்தேகம்

மேலும் இது குறித்து தகவல் அறிந்து விரைந்த வந்த சிவ காஞ்சி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டும் டில்லிராணியிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும், முதற்கட்ட விசாரணையில் தனது கணவர் மேகநாதன் தான் இச்செயலை செய்ததாக பெண் காவலர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆகையால் அவரது கணவரை முதலில் பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டு அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

விவாகரத்து முடிவு

ஏற்கனவே கணவன் மனைவி இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனை பிரிந்து தனது இரு குழந்தைகளுடன் பெண் காவலர் தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் விவகாரத்து கேட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் பெண் காவலர் மனுவும் கொடுத்துள்ளார். இந்த சூழலில்தான், குடும்ப தகராறில் விவகாரத்து கேட்டு பிரிந்து வாழும் தனது மனைவியான டில்லிராணியை, அவரது கணவர் மேகநாதன்தான் வெட்டி இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீருடையில் இருந்த பெண் காவலர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து பிரதமர் மோடி பயந்துதான் ஆகவேண்டும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News