Chennai Rains : சென்னையில் கோடை வெயில் மக்களை சித்தரவதை செய்து வந்ததை தொடர்ந்து, மழை சீசன் ஆரம்பித்திருக்கிறது. இன்று, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் வாட்டி வதைத்த வெயில்:


சென்னை உள்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் கடந்த சில மாதங்களாக வாட்டி வதைத்து வந்தது. கோடை வெயில், கத்திரி வெயில் என மாறி மாறி வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இருப்பினும், கடந்த மே மாதத்தில் ஒரு சில நாட்கள் கோடை மழை பெய்தது. ஆனாலும், அவை மக்கள் அனுபவிக்கும் வெப்பத்தை தணிக்கும் வகையில் இல்லை. இந்த நிலையில், ஜூன் மாதம் ஆரம்பித்ததை தொடர்ந்து மழை கொட்ட துவங்கியிருக்கிறது. 


சென்னையில் பரவலாக மழை:


சென்னை மாநகர் உள்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னரே அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஜூன் 5ஆம் தேதியான இன்று, மதியம் 2:30 மணிக்கு ஆரம்பித்த கனமழை விடாமல் பெய்து வருகிறது. இந்த நிலையில், மாலை 5 மணி வரை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. 


பிரதீப் ஜான் கணிப்பு:


சமூக வலைதளங்களில் வெதர்மேன் என்று பிரபலமானவர் பிரதீப் ஜான். இவர், சென்னை மழை குறித்து முன்னரே பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார்.



அதில், இன்று முதல் சென்னையை ஒட்டியிருக்கும் பகுதிகளில் மழை ஆரம்பிக்கும் என கூறிய அவர், மிதமான மற்றும் காற்றுடன் கூடிய மழைக்கு பிறகு, கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தார்.


மேலும் படிக்க | சென்னையில் மழை நின்றாலும் தற்போது தொடங்கியுள்ள புதிய பிரச்சனை!


கன மழைக்கு வாய்ப்பு: எந்தெந்த பகுதிகள்?


அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுகல், தேனி, நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 


மேலும், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி ஆகிய இடங்களிலும் அதை சுற்றி உள்ள இடங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 


மேலும் படிக்க | தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்: மஞ்சள் எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ