ADMK Name Flag Symbol Permanently Ban For O Panneerselvam : அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரி எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர், "அதிமுக பொதுச்செயலாளர் என என்னை ஐகோர்ட்டு, தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளன. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் என்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என கூறிவருவதுடன், அதிமுகவின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தி வருகிறார். இதனால் தொண்டர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது. எனவே அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க - பாஜக வேட்பாளர், தொகுதி பங்கீடு எப்போது நிறைவடையும்? வானதி சீனிவாசன் கொடுத்த அப்டேட்


உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு


இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில்(Chennai High Court) இரண்டு மாதங்களாக நடைபெற்று நவம்பர் 7 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு அளித்தது. அதில், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உரிமையியல் வழக்கில் பதிலளிக்க ஒ.பி.எஸ். தாமதப்படுத்துவதை சுட்டிக்காட்டி இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதில், அதிமுக-வின் பெயர்,கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.


ஓ பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்த தடை


அதேநேரத்தில், அதிமுக கொடி(ADMK Flag), சின்னம் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டாம் எனவும், வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஒபிஎஸ் தரப்பில் வழக்கு விசாரணையின்போது உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்பிறகு இந்த மனு மீதான இருதரப்பு வாதங்களையும் நீதிபதி என்.சதீஷ்குமார் அமர்வு கேட்டது. வழக்கு விசாரணை மார்ச் 12 ஆம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி சதீஷ்குமார் இன்று தீர்ப்பளித்தார். அதில், அதிமுக பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்(O Panneerselvam) பயன்படுத்த நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் ஓ பன்னீர்செல்வம் இனி அதிமுக பெயர், கொடி, சின்னம் உள்ளிட்ட எதையும் பயன்படுத்தக்கூடாது.


மேலும் படிக்க - பாஜக பற்றி அறிக்கைவிட பழனிசாமிக்கு முதுகெலும்பு இல்லையா? டிஆர்பாலு சரமாரி கேள்வி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ