ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா! எந்த ஊரில் தெரியுமா?
Latest News Madurai Temple Festival For Men : மதுரையில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் உச்சி கருப்பணசுவாமி திருக்கோவில் முக்கனி திருவிழா. -ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.
Latest News Madurai Temple Festival For Men : திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் பகுதியில் அமைந்துள்ள உச்சி கருப்பண சுவாமி திருக்கோவிலில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கனிமாற்றம் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகர் பகுதியில் அமைந்துள்ள உச்சி கருப்பணசுவாமி திருக்கோவிலுக்கு முக்கனி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடைபெறுவது வழக்கம்., இந்தாண்டு முக்கனி திருவிழா ஹார்விபட்டி பகுதியில் உள்ள கோவில் பெட்டி இருக்கும் இடத்திலிருந்து சாலை வழியாக திருநகர் பகுதியில் உள்ள உச்சி கருப்பணசுவாமி கோவில் வரை ஆயிரக்கணக்கில் முக்கனிகளை பக்தர்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
பின்னர் அங்கு சாமி சன்னதியில் உச்சிகருப்பணசுவாமிக்கு பக்தர்கள் கொண்டுவந்த முக்கனிகளான மா, பலா, வாழை பழங்களை சுவாமி முன்பு குவியலாக படைத்தனர்.
மேலும், 7 அடி உயர மாலையை சுவாமிக்கு சூடி பத்தி, சூடம் ஏற்றி தீபாரதனை காட்டினர். அங்கு ஏராளமான ஆண் பக்தர்கள் திரண்டு பயபக்தியுடன் சாமியை வழிப்பட்டனர். இதனையடுத்து., சாமிக்கு படைக்கப்பட்ட பழங்களை ஒவ்வொரு ஆண் பக்தருக்குமாக டஜன் கணக்கில் பிரசாதமாக வழங்கப்பட்டது.
பெண்கள் பார்க்க கூடாதாம்..
பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தை கோவிலை விட்டு வெளியே கொண்டு செல்லக் கூடாது என்ற ஐதீகம் முறையை பின்பற்றுவதால் கோவிலுக்கு வந்திருந்த ஆண் பக்தர்கள் தங்களால் முடிந்த அளவு சாப்பிட்டனர். மேலும்., ஆண் பக்தர்கள் நெற்றியில் பூசிய விபூதியை பெண்கள பார்க்க கூடாது என்பதால் தெய்வீக நெறியை் பக்தர்கள் பின்பற்றினர். அது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
மேலும் படிக்க | கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ