கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

TN School Reopening Date: கோடை விடுமுறைக்கு பின் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.   

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 24, 2024, 01:49 PM IST
  • ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என தகவல் வெளியானது.
  • தற்போது ஜூன் 6ஆம் தேதி என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வண்ணக் கயிறுகள் கட்டவும் மாணவர்களுக்கு தடை.
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு title=

TN School Reopening Date: கோடை விடுமுறைக்கு பின் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இன்று (மே 24) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி

முன்னதாக, ஜூன் 10ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படலாம் தகவல்கள் பரவிய நிலையில், தற்போது ஜூன் 6ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஏனென்றால் ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக இருப்பதால், வாக்கு எண்ணும் மையங்களில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், வியாழக்கிழமையான ஜூன் 6ஆம் தேதி அன்றே பள்ளிகளை திறக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளும் இதே நாளில் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க |காவல்துறை Vs பேருந்து ஊழியர்கள்! “இது பழிவாங்கும் செயல் அல்ல”

ஜூன் 6ஆம் தேதி அன்றே மாணவர்களுக்கான இலவச புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை அரசுப் பள்ளிகளில் வழங்க ஏற்பாடு செய்யப்படலாம். மேலும், இந்த கல்வியாண்டில் பல புதிய முன்னெடுப்புகளை மேற்கொள்ளவும் பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. குறிப்பாக, பள்ளி பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பும் திட்டமும் உள்ளது. 

முன்னெடுப்புகள்

தமிழகம் முழுவதும் உள்ள ஒரு கோடியே 25 லட்சம் மாணவர்களின் பெற்றோர்களின் செல்போன் எண்களை ஒருங்கிணைத்து வாட்ஸ் அப் மூலமாக மாணவர்களின் தினசரி செயல்பாடுகளை தெரிவிப்பதற்கான ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை முன்னெடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான நடவடிக்கைகள் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்புக்கு பிறகு துரிதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இதுவரை பெற்றோர்களின் 70 லட்சம் செல்போன் எண்கள் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில், மீதம் உள்ள செல்போன் எண்களை பள்ளிகள் திறந்ததும் ஒருங்கிணைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி மாணவ- மாணவிகள் கைகளில் வண்ணக் கயிறுகள் கட்ட தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது. ஏனெனில் தென் மாவட்டங்களில் இந்தக் கயிறு கட்டும் கலாசாரம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் இடையே சாதிய மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.எனவே பள்ளிகள் திறக்கப்பட்டதும், இந்த மூன்று விவகாரங்களும் உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி மாணவர்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தும் வண்ண கயிறுகளை அணிவதற்கு தடை விதிக்கப்படுவதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க |சென்னை : காளிகாம்பாள் கோயில் அர்ச்சகரின் காமகளியாட்டம் - காவல்துறையிடம் 3 பேர் வாக்குமூலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News