Tamil Nadu Budget Session 2024 Announcement Date Today in Tamil: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 6ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன் அவர் நிதி அமைச்சகத்தில் இருந்து ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவரை சந்தித்தார். அப்போது, பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிர்மலா சீதாராமனுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, தனது டிஜிட்டல் டேப்லட்டுடன் நாடாளுமன்ற வளாகத்திற்கு நிதியமைச்சர் வருகை புரிந்தார். மத்திய அமைச்சரவை பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.


தேதி இன்று அறிவிப்பு


அந்த வகையில், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பும் தற்போது எழுந்துள்ளது. இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாத நிலையில், ஆளுநர் உரையுடன் தொடங்கும் அந்த கூட்டத்தொடரின் தேதிகள் இன்று அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.  


மேலும் படிக்க | Economic Survey : பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசு ஏன் தாக்கல் செய்யவில்லை?


மேலும் சட்டப்பேரவை கூட்டம் வரும் பிப். 12ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அந்த கூட்டத்தொடரிலேயே பிப். 19ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என தகவலகள் தெரிவிக்கின்றன. இதுவரை தொடர்ந்து, மூன்றாண்டுகளாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பட்ஜெட்டுகளை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்து அறிவித்து வந்தார். 


தங்கம் தென்னரசின் முதல் பட்ஜெட்


கடந்தாண்டு அமைச்சரவை மாற்றப்பட்ட நிலையில், நிதியமைச்சர் பொறுப்பை தங்கம் தென்னரசு பெற்றார். எனவே, இந்தாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு முதன்முறையாக தாக்கல் செய்வார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் குறிப்பிடத்தக்கது. 


தமிழ்நாடு அரசின் கடந்த பட்ஜெட்டில் முக்கியமாக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்திட்டத்திற்கு கடந்த பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதாமாதம் ரூ.1000 தேர்ந்தெடுக்கப்பட்ட கோடிக்கணக்கான மகளிர் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. 


புதுமை பெண் திட்டம், தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திமுக அரசின் பெரும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம். மேலும், சென்னை, மதுரை ஆகிய நகரங்களின் மெட்ரோ திட்டங்கள், உட்கட்டமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்த அறிவிப்பும் இந்தாண்டு அதிகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


TN Budget 2024: எதிர்பார்ப்புகள் என்னென்ன?


இவை ஒருபுறம் இருக்க, கடந்தாண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் - அரசு தரப்பில் பெரும் கசப்பான நிகழ்வுகளுடன் முடிந்தது. ஆளுநர் உரை பெரும் சர்ச்சையையும் கிளப்பியிருந்தது. தற்போது மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் எப்படி அமையும் என்பதே பெரும் கேள்வியாக உள்ளது. 


மேலும் படிக்க | Budget 2024: பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் தேர்தல் முடிவுகளை மாற்றுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ