Youtuber Dhivya Kallachi Arrested : இன்ஸ்டாகிராம் பிரபலமான திவ்யா கள்ளச்சி, சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் 4 பேருடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யார் இந்த திவ்யா கள்ளச்சி?


டிக்டாக் செயலி இந்தியாவில் தடையின்றி செயல்பட்டு வந்த நேரத்தில், பலர் பிரபலமானார்கள். அப்படி கார்த்தி என்ற ஒருவரை பற்றி மட்டும் பேசி பிரபலமானவர், திவ்யா கள்ளச்சி. தான் கார்த்தி என்ற ஒருவரை ஆன்லைனில் காதலித்ததாகவும் அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் இப்போது அவரை தேடி வருவதாகவும் ஒரே டெம்ப்ளேட்டை ஓராயிரம் வீடியோவில் பேசி வைரலானார். இது ஒரு பக்கம் ட்ரோல் ஆக, இவருக்கு பிரபலமும் கூடியது. இவர் தேடு தேடென்று தேடிய கார்த்தி கிடைக்கவே இல்லை. ஆனால் பெயரும் புகழும் கிடைத்தது. இதை வைத்து சில வீடியோக்களில் இவருக்கு தலை காட்ட வாய்ப்புகளும் வந்தன. இருப்பினும் தான் தேடிக்கொண்டிருக்கும் கார்த்திக்கை இன்றுவரை ஆபாசமாக் திட்டித்திட்டி வீடியோ பதிவிட்டு பிரபலமாகி வருகிறார். திவ்யா. இவர், இந்த பாலியல் புகாரில் சிக்கியது எப்படி?


புகார்:


சித்ரா என்ற சமூக ஆர்வலரின் புகாரின் பேரில்தான் திவ்யா தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த புகார் விவரம் பின்வருமாறு:


அன்பார்ந்த ஊடகத் துறையினருக்கு, நான் சித்ரா, குழந்தைகளுக்காக சேவை செய்யும் நோக்கில் “மக்கள் பார்வை கல்வி அறக்கட்டளை”ஒன்றை நடத்தி வருகிறேன் YouTube ல் மக்கள் பார்வை என்ற பெயரில் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறேன், இன்னிலையில் Insta பிரபலமாகிய திவ்யா கள்ளச்சி என்று அறியப்படும் பெண் என்னிடம் நூதனமாக ad sense மூலம் இரண்டரை லட்சம் பணத்தை திருடி உள்ளார் , இது குறித்து உண்மை தெரிந்து நான் என் பணத்தை திருப்பி தர சொல்லியும் சமூக சீர்கேடாக அவர் பதிவிடும் வீடியோக்கள் சம்பந்தமாக அவரிடம் கேட்க அவர் வசித்த இடமான ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றபோது அங்கு பல 18 வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகள் இவளால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது எனக்கு தெரிய வந்து நான் அதிர்ந்து அந்த குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் டிஜிபி அலுவலகத்தில் புகார் நான் அளித்துள்ளேன் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். திவ்யா கள்ளச்சியும் அவரது கூட்டாளிகளும் இது பற்றி வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று என்னை மிரட்டுகிறார்கள்.


பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை மனதில் வைத்து இந்த வழக்கின் சம்பந்தந்தமாக  நான் DGP அய்யா அவர்களிடம் கொடுத்த புகார் மனுவிற்குண்டான CSR விவரங்கள் ஆதாரங்களுடன் ஊடகத்துறை நண்பர்கள் மூலமாக பொது மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
இந்த வழக்கின் சம்பந்தமான அனைத்து ஆதாரங்களையும் (குழந்தைகளின் தனிப்பட்ட விபரம் தவிற) ஊடகம் வாயிலாக வெளியிட தயாராக உள்ளேன்.


என்று குறிப்பிட்டிருந்தார். இதன்படி, சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் 4 பேருடன் சேர்த்து திவ்யாவும் கைது செய்யப்பட்டிருக்கிறார். 


மேலும் படிக்க | திமுக கொடியுடன் பெண்களை துரத்திய கார்... வைரலான வீடியோவால் பரபரப்பு - பின்னணி என்ன?


மேலும் படிக்க | சீமான், பாஜக-வின் கொள்கை பரப்பு செயலாளரா? - திருமாவளவன் கேள்வி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ