பிரதமர் நரேந்திர மோடி பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள தமிழகமத்திற்கு ஆதரவு கேட்டு வருகிறார், தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் என மயிலாடுதுறையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது, மயிலாடுதுறை காவேரி பாசனத்தால் வேளாண்மை செழிப்போடு இருக்கக்கூடிய மாவட்டம். புகழ்பெற்ற பழமையான திருக்கோயில்கள் நிறைந்து இருக்கக்கூடிய மாவட்டம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட பூம்புகார் ஏழுநிலை மாடம் மற்றும் சிற்பக்கூடம் கொண்ட மாவட்டம் மயிலாடுதுறை என தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழகத்தில் குடியேறினாலும் மோடிக்கு வாக்கு கிடைக்காது - கனிமொழி


மேலும் முன்சீப் வேதநாயகம் மணிமண்டபம் மற்றும் தமிழிசை மூவர் மண்டபம் புனரமைப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருவதாக கூறினார்.இது போன்ற மாவட்டத்தின் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம் என தெரிவித்தார்.  புதிய மாவட்டம் அறிவிப்பது பெரிது அல்ல அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தருவதுதான் மிக மிக உறுதியானது என தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாவட்டத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகள் திமுக ஆட்சியில் தான் செய்து தரப்பட்டதாக தெரிவித்தார். அதற்கு எடுத்துக்காட்டு தான் இன்றைய தின விழா என கூறினார். அறிவிப்புகளை அரசாணையாக மாற்றும் அரசு திமுக அரசு எனவும், அரசாணைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவது இந்த அரசு எனவும் கூறினார். 


இந்த விழாவில் கூடுதல் சிறப்புகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். 150 ஆவது ஆண்டில் அடி அடித்து வைக்கும் மயிலாடுதுறை நகராட்சிக்கு 10 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்படும் என தெரிவித்தார்.  வேளாண் பெருங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சீர்காழி வட்டம் பெருந்தோட்டம் கிராமத்தில் செல்லனாற்றின் குறிக்கிலும் , தென்னம்பட்டினம் கிராமத்தில் முல்லை ஆற்றின் குறிக்கிலுலும், தரங்கம்பாடி வட்டம் சந்திரபாடி கிராமத்தில் நண்டல ஆற்றின் குறிக்கிலும் உப்பு நீர் புகுவதை தடுக்கும் வகையில் கடைமடை நீர் ஒழுங்கி 44 கோடி செலவில் அமைக்கப்படும்.  குத்தாலம் வட்டத்தில் வானாதி ராஜபுரம் மற்றும் அரையபுரம் வாய்க்கால் உழவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் கடலங்குடி கிராமத்தில் 2 கோடி 40 லட்சம் செலவில் புதிய அணை அமைக்கப்படும்.


நிதி நெருக்கடி இருக்கக்கூடிய சூழ்நிலையில் எந்த நலத்திட்டங்களையும் அரசு நிறுத்தவில்லை எனவும் , மக்கள் தொண்டு ஒன்றுதான் நமது ஆட்சி நோக்கம் என தெரிவித்தார்.  தமிழ்நாடு முதலமைச்சர் ஆக இருந்தாலும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் டெல்டா காரன் என்ற உணர்வோடு இந்த திட்டங்களை துவங்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.  தேர்தல் நேரத்தில் வந்து முகத்தை காட்டக் கூடியவர்கள் நாங்கள் இல்லை என்றும் , யார் என்று நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என அவசியம் இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கப் போகிறார்கள் என்றும், பிரதமர் அடிக்கடி தமிழகம் வருகை தந்து கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டிற்கு நன்மை செய்துவிட்டு நமது கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு தமிழகம் வரட்டும் என கருத்து தெரிவித்தார்.


தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் மற்றும் ஓட்டு மட்டும் போதும் என வரவேண்டாம் என கருத்து தெரிவித்தார். சமீபத்தில் இரண்டு இயற்கை பெரிய பேரிடர்களை எதிர்கொண்டோம் , அதை சரி செய்ய 37 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கேட்டோம் , அதை கொடுத்துவிட்டு தமிழ்நாட்டில் பிரதமர் வருகிறாரா ? என கேள்வி எழுப்பினார். ஒரு ரூபாய் கூட தமிழகத்திற்கு நிதி உதவி செய்யவில்லை , தங்களுடைய பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள தமிழகமத்திறுகு ஆதரவு கேட்டு வருகிறார்கள் என விமர்சித்தார்.  தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் , தமிழ்நாட்டு உரிமை மற்றும் வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் நமது திராவிட மாடல் அரசு பக்கம் தான் மக்கள் என்றும் உறுதுணையாக இருப்பார்கள் என கூறினார்.


மேலும் படிக்க | வாணியம்பாடியில் கபடி போட்டி: பேங்க் ஆப் பரோடா அணி, டெல்லி போலீஸ் அணி வெற்றி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ